Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

மயிலிட்டி பெயரை முதன் முதலாக இணைய உலகத்திலும், கூகிளிலும், வானொலியிலும். பதித்த. மயிலிட்டி டொட் கொம் 7 வது ஆண்டில் கால் பதித்துள்ளது. மயிலிட்டி டொட் கொம் மிகவும் சந்தோசத்துடன் மிக உற்சாகமாக மயிலிட்டி மக்களுக்காக இலவசமாக சேவையாற்றி பெருமிதம் அடைகின்றது. எமது வளர்ச்சிக்கு உதவி புரிந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நாம் தலை வணங்கி நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

ஒன்றே செய்யினும்
நன்றே செய்வாய் அதை
எப்படியும் செய்வாய்
மயிலிட்டி வளர்ச்சிக்கு
நன்றி

___________________________________________________________________________

புதிய காணொளி

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் 2011 ஒன்றுகூடல்.

___________________________________________________________________________

மயிலிட்டி . கொம் அறக்கட்டளை கல்வி கற்கையின் உதவி பெற்று படிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியினர்.
பிரித்தானியாவின் புதிய நிர்வாகசபை.

___________________________________________________________________________

மரண அறிவித்தல்

தோற்றம்-29-11-1938
 
மறைவு-14-05-2012

அமரர் திரு கந்தவனம் சண்முகம்

கரணவாயை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் சண்முகம் அவர்கள் 14-05-2012 அன்று திருகோணமலையில் இறைவன் அடி எய்தினார். 
அன்னார் கந்தவனம் முத்துப்பிளையின் அன்பு மகனும். 
தேம்பாமலரின் அன்புக்கணவரும்
சுகந்தினி, காண்டீபன், தயாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
வல்லிபுரம், மயில்வாகனம், கதிரவேலு, சுப்பிரமணியம், வள்ளியம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரரும். 
செல்வரத்தினம், மகேஸ்வரியின் அன்பு மருமகனும்.
சுந்தரலிங்கம், ஜெயமலர், இன்பமலர், ரஞ்சிதமலர், புனிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும். 
கிருபானந்தன், அருட்செல்வம், ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும். 
கிருஷாந், மதுஷாந், விந்தியா, அபிசேகாவின் பாசமிகு பேரனும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மருமகன் வேலும்மயிலும் கிருபானந்தன்- 00447400070006 (பிருத்தானியா)
மனைவி தேம்பாமலர்- 0094262225386(இலங்கை)

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________

மரண அறிவித்தல்

தோற்றம் 25-11-1963
 
மறைவு 13-5-2012

அமரர் சசீந்திரன் (குட்டி) செல்வவேலாயுதம் (இராசகிளி)

நாவலடி மயிலிட்டியைச் சேர்ந்த சசீந்திரன் (குட்டி) செல்வவேலாயுதம் (இராசகிளி) அவர்கள்
13-05-2012 ஞாயிறு அன்று பிரித்தானியா (லன்டன்) இல் இறைவன் அடி எய்தினார்
அன்னார் புவனேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் ஜனனியின் பாசமிகு தந்தையும்
இராசகிளி, அம்மன்கிளி அவர்களின் மகனும். ரவி, ராஜன், முறளி, கேஜம், நேரு, பிரபா, பிரதீஸ், செல்வம், வில்வம், சாந்தி ஆகியோரின் சகோதரரும்
சதீஸ், சுபாஸ், இந்து, ரேவதி, சஜீவதி, ஹரிகரன் மாதுளன், ஜெனிஷியா ஆகியோரின் சித்தப்பாவும்
மயூரம், மயூரி, மாதுரி, ரவினா, சுவர்னா, பிரசாந், பிரதீப், பிரதாப் ஆகியோரின் மாமாவும்
தவராஜா, இந்திரலிங்கம், நிமலன், றஞ்சி, புஸ்பா, ஜமுனா, தர்ஷினி, விஜி, ரிவேதா, கமலி, ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
இவரது இறுதிக்கிரிகைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் தற்போது அவரது குடும்பத்தினருக்கு பிரித்தானியாவில் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு திரு முறளி
1A BLAWITH ROAD
HARROW
HA1 1TL

தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு

UK
FRANCE
தவம்
07817867570
ரவி
0033666309620
ராஜன்
07984574731
கெஜம்
0033751232768
முறளி
07817537908
நிலன்
0033951678762
நேரு
07983527757
பிரபா
0033660458703
CANADA
NEW ZEALAND
இந்திரலிங்கம்
0015143441054
பிரதீஸ்
006496200373
INDIA
அம்மன்கிளி புவனேஸ்வரி
0091431256923

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி . கொம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________

கனடாவில் நூல் வெளியீட்டு விழா

மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய ஓய்வு பெற்ற அதிபர் கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் நூல் வெளியீடு மூன்றாவது பாகம் கனடாவில் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் 15-04-2012 அன்று நடைபெற்றது. விழாவை பிரபல தொலைக்காட்சி ஊடகங்களான T . V . I  &  TAMIL ONE  உடன் பத்திரிகை மற்றும் வானொளியாளர்களும் கலந்துகொணடு படமாக்கியது குறிப்பிடத்தக்கது. நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொணடு சிறப்பித்த அனைவருக்கும் விழாவை ஏற்பாடு செய்த மயிலிட்டி மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.
நன்றி

___________________________________________________________________________

திரு சிவபாதம் (ஜோர்ஜ்) அவர்களின் புதல்வி பத்மினியின் திருமணம்

___________________________________________________________________________

இந்தப்பாடலை மயிலிட்டி மகன் பாடியுள்ளார் குரல் வடிவத்தை கேட்டு யார் என்று பதிவு செய்யுங்கள். நீங்கள் கண்டு பிடிக்காவிட்டால் பிறகு பெயரை அறியத்தருகின்றோம்.

___________________________________________________________________________

மயிலிட்டி . கொம் அறக்கட்டளை

அனைத்து உலக மயிலிட்டி மக்களின் கல்வி கற்கை உதவியின் கீழ் உதவி பெற்று கல்வி கற்கும் மாணவர்களின் விபரம்.

___________________________________________________________________________

கௌதமன் கருணாநிதி அவர்களின் குறும் திரைப்படங்கள் செருப்பு, விளைவு பற்றி

___________________________________________________________________________

வீட்டு வேலைக்கு பெண் தேவை

யாழ்ப்பாணத்தில் வீட்டில் தங்கியிருந்து ஆறு முதியோர்களுக்கு சமைத்துக்கொடுத்து அவர்களின் வீட்டு தேவைகளை செய்வதற்கு உடனடியாக ஒரு பெண் தேவை. ஒரு குடும்பத்திற்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செய்வதனால் உதாரணமாக கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு பிள்ளை இருந்தாலும் பிள்ளையுடன் தங்கியிருந்து செய்வதற்கு ஒழுங்கு செய்து தருவதுடன், ஊதியமும் வழங்கப்படும். மேலதிக தொடர்புகட்கு மயிலிட்டி டொட் கொம்முடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி

___________________________________________________________________________

நன்றி!

புலம் பெயர்ந்தாலும் மனதால் மண்ணின் நினைவுகளைச் சுமந்து வாழும் எம் அன்பான உறவுகளே
தாயகத்தில் எம் மண்ணில் மக்களின் இழப்புகள், சொத்துக்கள் அழிப்புகள், இடம் பெயர்ந்த அவலங்களென எம் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தார்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். எமது மக்கள் சொந்த வாழ்விடங்களை, அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இவ்வேளையில் அவர்கள் பிள்ளைகளின் படிப்புக்கும், வாழ்க்கைக்கும் ஒளிவிளக்காய் இருந்து மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை மூலம் பேருதவி செய்துகொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

நன்றி
அனைத்து உலக பொறுப்பாளர்கள்

___________________________________________________________________________

மயிலிட்டி வாக்கெடுப்பு

மயிலிட்டி பெயர் மாற்றம் செய்வது பற்றிய வாக்கெடுப்பு 16-07-2011 ஆரம்பிக்கப்பட்டு 16-07-2012 அன்று ஒரு வருடத்துடன் நிறுத்தவுள்ளோம். வாக்களிப்பு முடிந்தவுடன் பெயர் மாற்றம் செய்வதை மக்கள் விரும்பவில்லை என்றால் எங்ளுக்குத் தெரிந்த பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு முறைப்படி அறிவிப்போம். அவர்கள் தரும் பதிலையும் மக்களுக்கு அறிவிப்போம். இதுவரை நடந்த வாக்கெடுப்பில் மயிலிட்டி யைத்தான் மக்கள் விரும்புகின்றார்கள். உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்பி வையுங்கள்
நன்றி

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களின் மயிலிட்டி டொட் கொம்மின் அடுத்த மைல்கல்!!!

மயிலிட்டி டொட் கொம் மயிலிட்டி மக்களுக்கென்று ஒரு பாடல் பாடி இசை அமைத்து வெளியிடவுள்ளது. பாடலை நீங்கள் எழுத விரும்பினால் மயிலிட்டியும், மயிலிட்டி மக்கள் சம்பந்தப்பட்ட நல்லவைகள் என்று கருதும் அனைத்தும் உள்ளடங்கியதாக 4 முதல் 6 நிமிடம் வரை பாடல் வரக்கூடியதாக எழுதி அனுப்பவும். கிடைக்கும் பாடல்களில் ஒரு பாடலை அனைத்துலக பொறுப்பாளர்களினால் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்படும். பாடலை பாட விருப்பம் உள்ளவர்கள் மற்றும், பாடல் சம்பந்தமாக மேலதிக விபரங்களுக்கும் பொறுப்பளர்களுடன் தொடர்புகொள்ளவும்.
நன்றி

___________________________________________________________________________

வெளிநாடுகளில் வாழுகின்ற மயிலிட்டி மக்களுக்கு

தாயகத்தில் இந்த அறக்கட்டளை மூலமாக எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்க உதவி செய்கின்றோம் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு  போகின்றது. அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறியும் போது யாரையும் தட்டிக்கழிக்க முடியாமல் உள்ளது எனவே இதற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்று உங்களால் முடிந்த உதவியை செய்யவும். உங்களின் ஒவ்வொரு ரூபாவும் அவர்களிற்கு நல்வாழ்வை வழங்க உதவும்.
நன்றி

___________________________________________________________________________

உடனடியாக பொறுப்பாளர் தேவை

தாயகத்தில் மயிலிட்டி டொட் கொம் பொறுப்பாளராக இருந்து அறக்கட்டளை கல்வி கற்கை உதவிக்காக செயற்படுவதற்கு வேல்வீதி,திருப்பூரை சேர்ந்தவர்கள் தேவைப்படுகின்றார்கள். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக மின் அஞ்சல் மூலமாக அல்லது பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி

___________________________________________________________________________

இலவச திருமண இணைவுச் சேவை

___________________________________________________________________________

விநாயகர் ஆலயம்

மயிலிட்டி மருதடி வரசித்தி வினாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைத்தது. ஆனால் மிகவும் குறுகிய நாட்கள் இருந்தமையால் செல்லமுடியவில்லை எனவே வேறு ஒரு நாள் போவதிற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது என அறிகின்றோம். அனுமதி கிடைத்ததும் அறிவிக்கின்றோம்.
நன்றி

___________________________________________________________________________

மயிலிட்டியில் காணி விற்பனைக்கு

___________________________________________________________________________

மயிலிட்டியின் ஒவ்வொரு ஒழுங்கைக்கும் ஒரு இணையம். தற்போது 7 இணையம் மேலும் வரப்போகின்றது. இதன் முக்கியத்துவம் என்ன ?

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களுக்கு ஒரு வேண்டுகோள்

மயிலிட்டி பெரியோர்கள் ஒன்று சேர்ந்து அனைத்து மயிலிட்டி மக்களின் வரலாறு பற்றி எழுதி ஒரு புத்தகமாக வெளியிடவுள்ளனர், ஏற்கனவே சிலர் எழுதியுள்ளார்கள் அவற்றில் எல்லாம் முழுமையாக இல்லை என்பதனால் அவற்றையும் உள்ளடக்கி மயிலிட்டி மக்களின் வாழ்க்கை, தொழில்கள், பெரியோர்கள், கோயில்கள், விளையாட்டுக்கழகங்கள், படிப்பகங்கள், நாடகம், சினிமா, இன்னும் பல தெரியாமல் இருக்கலாம் இவை எல்லாம் உள்ளடக்கி புத்தகமாக வெளியிடவுள்ளார்கள் குறிப்பாக, வேல்வீதி, திருப்பூர், காலான்காடு, முலவை, கொத்தாவத்தைக்கு பின்னால் உள்ள மக்களும் சேர்ந்து எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள், அதற்கு அனைத்து மயிலிட்டி மக்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்து, இது ஒரு வரலாற்று புத்தகமாக வருவதிற்கு உதவி செய்யும்படி மிகவும் அன்புடனும் உரிமையுடனும் மயிலிட்டி . கொம் கேட்டுக்கொள்ளுகின்றது, உங்களுக்கு தெரிந்தவர்களின் தொடர்புகளை எற்படுத்தி கொடுப்பதே பெரும் உதவியாக இருக்கும் இதுபற்றிய கோள்விகளுக்கும் உதவிகளுக்கும்,
திரு இராசரத்தினம் (நேசம்) நாகேந்திரம் 44 208 2050947 UK
திரு இரத்தினராசா விஜயரத்தினம் 416 7241255 CANADA
திரு குணபாலசிங்கம் அருணாசலம் 94 773144883 JAFFNA
திரு. சின்னத்தம்பி இராமநாதன் JAFFNA
மயிலிட்டி டொட் கொம்முடன் தொடர்பு கொண்டாலும் இவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித்தருவோம்.

___________________________________________________________________________

மயிலிட்டி டொட் கொம்மிற்கு மயிலிட்டியில் இருக்கும் கோயில்களின் பெயர்கள் கிடைத்துள்ளது. இவற்றில் சில கோயில்கள் எங்கே இருந்தது என்பது தெரியவில்லை இவை எங்கே இருந்தது என்ற விபரத்தை தெரிந்தவர்கள் எமக்கு அறியத்தரவும், இவை மயிலிட்டி வரலாற்றில் ஆவணப்படுத்தப்படவேண்டியவை, இவற்றில் இல்லாத கோயில்கள் தெரிந்தால் அவற்றையும் தெரியப்படுத்தவும்.

நன்றி மயிலிட்டி டொட் கொம் worldwide@myliddy.com

1
KOLLVIYAKALLATI VINAYAGAR TEMPLE
15
PUTHUKINNATRU VAIRAVAR TEMPLE
2
SRI MURUGAN TEMPLE
16
SANGVATHAI MANNIKA PILLAYAR TEMPLE
3
KANNAHAI AMMAN TEMPLE
17
MAILUVAKATTAI PILLAYAR TEMPLE
4
SRIPATHIRAKAALI AMMAN TEMPLE
18
THOPU PILLAYAR TEMPLE
5
PARASAKTHI AMMAN TEMPLE
19
KONDALADI VAIRAVAR TEMPLE
6
THEVIAKOLLAI AMMAN TEMPLE
20
KOTHAVATHI VAIRAVAR TEMPLE
7
MUTHUMARI AMMAN TEMPLE
21
MUNNIYAPPAR TEMPLE
8
PUVANESVARI AMMAN TEMPLE
22
MAILODAI VAIRAVAR TEMPLE
9
KANNAHAIAMMAN TEMPLE
23
NAVALADY VAIRAVAR TEMPLE
10
KATTAIKADU VAIRAVAR TEMPLE
24
SRI MURUGAN TEMPLE
11
THIRUPOOR PECHIAMMAN TEMPLE
25
VEERAPATHTHIRAR TEMPLE
12
POOTHVARAYAR TEMPLE
26
HOSPITAL MURUGAN TEMPLE
13
VADAPRUMPARPPU PILLAYAR TEMPLE
27
KAANIKKAI MAATHA TEMPLE
14
MARUTHADDI PILLAYAR TEMPLE
28
MULAVAI MAATHA TEMPLE

___________________________________________________________________________

பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள பொதுமக்களின் 1202 வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.!

வடபகுதியில் உள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள பொதுமக்களின் 1202 வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. நேற்று (23) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது, சிறீலங்கா அரசின் பிரதம அதிகாரியான தினேஸ் குணவர்த்தனா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பொதுமக்களின் வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருகின்றனர். 1129 வீடுகளை இராணுவத்தினரும், 35 வீடுகளை கடற்படையினரும், 32 வீடுகளை வான்படையினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீடுகள் அனைத்தும் பெருமளவான நிலங்களுடன் பயன்பாட்டில் உள்ளதுடன், இரண்டு அரிசி ஆலைகளும் படையினரின் வசம் உள்ளது என தெரிவித்துள்ளார்

___________________________________________________________________________

Share

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player