பிருத்தானியாவில் 12-02-2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.
நடந்து முடிந்த நிர்வாக சபையினர் மிகவும் சிறப்பாக எல்லா நிகழ்வுகளையும் செய்தமைக்காக நன்றியையும் பராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். அத்துடன் புதிய நிர்வாக சபையினருக்கும் அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.
நன்றி
பிரித்தானியாவில் 29-05-2011 அன்று BTSA அமைப்பினரால் நடாத்தப்பட்ட போட்டியில் மயிலிட்டி மக்களின் சார்பில் மயிலிட்டிவிளையாட்டுக்கழகமும், கண்ணகிவிளையாட்டுக்கழகமும் பங்குபற்றி உதைபந்தாட்டத்தில் முதற்பிரிவில் முதலாவது பரிசையும், கயிறு இளுத்தலில் இரண்டாவது பரிசையும் எமதாக்கிக் கொண்டார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.