உங்கள் மயிலிட்டி பற்றிய கவிதைகள் இங்கே இடம் பெற எழுதி அனுப்புங்கள்

_________________________


உன்னை நேசிக்கப் பழகிக் கொள்...

உன்னை நேசிக்கப் பழகிக் கொள்..
ஏனென்றால்...?
இது கலிகாலம்.
நீ கனகாலம் நேசித்த காதலி...
உன்னைக் கைவிட்டுச் செல்லலாம்.
என்றும் உன் மனதில் நிறைந்த மனைவி
மாற்றானுடன் கைபிடித்துச் செல்லலாம்.
பாசமுடன் வளர்த்த பிள்ளைகள்...
பிசாசுகளாய் மாறலாம்.
நண்பன் எதிரியாகலாம்.
நட்பு பகையாகலாம்.
உறவுகள் பிளவுகளாகலாம்.
உணர்வுகள் மரத்துப் போகலாம்.
உண்மை சாகலாம்.
தர்மம் தற்கொலை செய்யலாம்.
நியாயம் நிலையற்றுப் போகலாம்.
அன்பு அறவே அற்றுப் போலாம்.
இதற்கெல்லாம் நீ கலங்காதே...
நடைமுறையில் நடப்பவைகளே இவை...
மற்றவர்கள் உன்னைப்பற்றி எண்ணாத போது ?
நீ ஏன் அவர்களைப் பற்றி எண்ணுகின்றாய் ?
மற்றவர்கள் உன்னை நேசிக்காத போது ?
நீ ஏன் இவர்களை நேசிக்கின்றாய்.
இது கலிகாலம்...
இக் காலத்திற்கும்
இக் கால இயந்திர மனிதர்களுக்கும்.
ஏற்றால் போல்
வாழப் பழகிக்கொள்
மற்றவர்களை நேசி...
அதற்காய்...
உன்னைவிட அதிகம்
அவர்களை நேசித்து
அவர்களுக்காய் உயிரை விட்டுவிடாதே...
எனவே... உன்னை நேசிக்கப் பழகிக்கொள்
ஏனென்றால் இது கலிகாலம்...

கௌசிகன்

_________________________


_________________________


நினைவுகளாய்

ஆழ்கடலை ஆர்ப்பரித்து பாட்டிசைக்க
மாலைக்கதிரவன் வானில் பல மாயம் புரிகையில்
மேக நெற்றியில் வட்டப்பொட்டென
நிலா மகள் வந்து விட
நிலாச் சோறு உண்ட காலம்
சொர்ப்பணமாய் மாறியதேன் ?
பிறந்ததும் மிகக்கற்றுத்தெளிந்ததும்
இழந்த தமிழ் பண்பினை போற்றி
வாழ்ந்த மண்மீது கொண்டகாதல் தேயாது,
மலரும் நினைவுகளாய் வந்தது என் நினைவில்
வாழ வழியின்றி தினம் வடுவோர்
வளம் கண்டது என் ஊரில்...
வளநிறை  நல்மயிலை தலைநிமிர்
தானென்று ஆங்காரமாய் நின்ற நாள் என்னமோ
இன்று ஊர்திகளின் அணிவகுப்பில்
நசுங்குண்ட நங்கை போல
உடம்பெல்லாம் உரசலிலே எரிவுகண்டு
பிணம்தின்னி கழுகுகளின் உறைவிடமாய்
கோலமிழந்து உனை இழந்தாய்
கனா ஒன்று நான் கண்டேன்
முன்போல எழில் மயமாய் எனை அழைக்க
நானும் வருவதாய்த்தான் சொல்லி இருந்தேன்
அது உனக்கும் எனக்கும் தூரம் கொஞ்சமென நினைத்தேன்
இது வெடிகளின் ஒசைகளின்பின்
ஆனால் உன்னை புத்தன் பூமி என்றல்லவா சொல்கிறார்கள்
அப்ப சித்தன் சொன்னான் நீ எங்கள் பூமி என்று
பொறுத்திரு வருவோம் அழிந்திடும் இடைவெளியெல்லாம்
வருவோம், நாம் இனி தணியோம்
ஆளான நாள் முதலாய் ஆன வதை போதுமம்மா
மயிலை உன் வாடகை இல்லா வசந்தத்தை வசீகரிக்க
உன் சேய்களாய்

திருமதி உமை ஜெயறட்ணம்

_________________________



_________________________