Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

செய்திகள்
   

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


எம் மண் வாசனை இணையமெங்கும் நுகர வகை செய்வோம்

நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக மயிலிட்டி மக்கள் பாதிக்கப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். அதன் பாதிப்பால் அனைவரும் சிதறுண்டு வாழ்ந்துவருகின்றனர் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவருகின்றபோதும் நாங்கள் பிறந்த கிராமத்தில் காலணிகள் இல்லாமல் ஓடிவிளையாடிய மண்ணை மயிலிட்டி என்ற பெயரை அனைவரின் மனங்களில் இருந்தும் மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிற்காகவும் எமது அடுத்த சந்ததியினருக்காகவும் இவ் இணையத்தில் மயிலிட்டியின் வரலாறு. மயிலிட்டி ஒன்றியங்களின் நிகழ்வுகள், மயிலிட்டி தொடர்பான புகைப்படங்கள். மயிலிட்டி ஆலயங்கள். பாடசாலைகள். மயிலிட்டி சம்பந்தமான நிகழ்வுகள், மாவீரர்கள். மயிலிட்டி மக்களின் முன்னேற்றத்திற்கு அது சார்ந்த அனைத்து நாட்டுமக்களையும் ஒன்றிணைக்கும் இணையமாகவும், குறிப்பாக மயிலிட்டி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மயிலிட்டி டொட் கொம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  

மயிலிட்டி தொடர்பான தகவல்களை எல்லா நாடுகளிலும் வாழ்பவர்கள் எமக்கு அனுப்பி உதவி செய்வதின் மூலம் இவ் இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒன்றே செய்யினும்
நன்றே செய்வாய் அதை
எப்படியும் செய்வாய்
மயிலிட்டி வளர்ச்சிக்கு
நன்றி

___________________________________________________________________________

___________________________________________________________________________

மயிலிட்டி மருதடி சித்தி விநாயகர் ஆலயம் இராணுவத்தினரால் முற்றாக அழிப்பு!

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தை இராணுவத்தினர் முற்றாக அழித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயர் பதுகாப்பு வலயமாக காணப்படும் இந்த பிரதேசத்தில், கோவில்களுக்கு சென்று வழிபட இராணுவத்தினர் பாதுகாப்புடன் அனுமதி வழங்கி இருந்தனர்.

இதன்படி நேற்றையதினம் அந்த பகுதியில் சென்று பார்த்த போது, குறித்த விநாயகர் ஆலயம் அமைந்திருந்த பகுதியில் காணப்பட்ட வேப்பமரம் மாத்திரமே எஞ்சி இருந்ததாகவும், ஆலயம் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த பகுதியில் இருந்து காணிக்கை மாதா கோவில் கடந்த வருடம் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________

வலி.வடக்கில் எட்டு கிராமசேவகர் பிரிவுகள் புத்தாண்டு தினத்தில் விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியின் எஞ்சிய நிலப் பகுதிகளை எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. 
 
யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர். 
 
வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), தையிட்டி தெற்கு(ஜே-250), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 567 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னோடியாக குறித்த பிரதேசங்கள் மிதிவெடி அற்ற பிரதேசம் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையில் இராணுவத்தினர் அந்த பிரதேசங்களை ஆராய்ந்துள்ளனர். 
 
எதிர்வரும் 07ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்துக்கு அதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் தெரியவருகிறது. வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 6ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதியில் ஆயிரம் ஏக்கர் கடந்த 20 ஆம் திகதிக்கு முன்னதாக விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் சுமார் 400 ஏக்கர் நிலப் பகுதியே கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

___________________________________________________________________________

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 1000 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்க அமைச்சரவை தீர்மானம்



பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
முதற்கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வலவாய் கிராம சேவைப்பிரிவு J/284க்கு சொந்தமான 220 ஏக்கர் காணி மீள கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் என 1,022 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடு கட்ட நிதி வழங்கப்படும் எனவும் பாடசாலை, ஆரம்பப் பாடசாலை, வைத்தியசாலை, சமயஸ்தலங்கள், தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் இங்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும்.
மிகுதி 780 ஏக்கர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது நிலங்களை இழந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
யுத்தகாலத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 11,639 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவு நிலம் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை இராணுவப் படை வசம் 6,152 ஏக்கர் நிலம் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்றது.
தற்போதுள்ள 6152 ஏக்கர் நிலத்திலிருந்தே குறிப்பிட்ட மீள்குடியேற்றத்துக்கென 1000 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதேவேளை - கிழக்கு மாகாணத்தில் விமானப்படை உயர்பாதுகாப்பு வலயமான பானம பிரதேசத்தில் தற்போது கட்டிடங்கள் நிர்மானிக்கப்படுகின்ற 25 ஏக்கர் நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தவிர்ந்த சம்பூர், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் மக்களது நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு கீழ் உள்ளன.
எனவே அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப இப்பிரதேச மக்களதும் நிலங்களை வழங்க கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கில் தேவையற்ற விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்து அக்காணிகளை அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு மீளக் கையளிப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதி அளித்திருந்தனர்.
அதற்கமைய முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கு மாகாணத்தின் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயம் 1000 ஏக்கர்களால் குறைக்கப்படவுள்ளது.

___________________________________________________________________________

27 வருடங்களின் பின்னர் நிலங்களைப் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள்! கண்ணீருடன் திரும்பிய சோகம்

வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்திற்காக அழைக்கப்பட்ட மக்கள் இன்றைய தினமும் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் தங்கள் காணிகளை, வீடுகளை 27 வருடங்களின் பின்னர் ஆவலுடன் பார்க்க வந்த மக்கள் கண்ணீருடன் வீடுகளுக்கு திரும்பியிருக்கின்றனர்.

இன்றைய தினம் 9 கிராமசேவகர் பிரிவுகளில் ஜே.235 காங்கேசன்துறை தெற்கு, ஜே.236 பளைவீமன்காமம் வடக்கு, ஜே.237 பளைவீமன்காமம் தெற்கு, ஜே.238 கட்டுவன், ஜே.240 தெனியமலை, ஜே.241 வறுத்தலைவிளான், ஜே.244 வசாவிளான் கிழக்கு, ஜே.250 தையிட்டி தெற்கு, ஜே.252 பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மேற்படி கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுடைய விடுவிக்கப்பட வேண்டிய நிலங்களில் ஒரு பகுதி நிலங்கள் மட்டுமே விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் மேற்படி பகுதிகள் முழுவதும் முழுமையாக மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள், தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்தனர்.

எனினும் மக்களுடைய மேற்படி 9 கிராமசேவகர் பிரிவுகளிலும் 1773.72 ஏக்கர் நிலத்தில் சுமார் 613 ஏக்கர் நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக தங்கள் நிலங்களை பார்க்க வந்த மக்கள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல முடியாமல் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாரிய இராணுவ வேலிகளை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில்,

27 வருடங்களுக்குப் பின்னர் சொந்த நிலத்தை பார்க்கும் ஆவலுடன் வந்த எங்களை திருப்பி விட்டார்களே! என கண்ணீருடன் கூறிய மக்கள், கடந்த 27 வருடங்களில் பல அவல வாழ்க்கை நாங்கள் வாழ்ந்துவிட்டோம்.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாங்கள் எங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்லலாம், நாங்கள் சொந்த நிலங்களில் நிம்மதியாக வாழலாம். என நினைத்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு நாங்கள் அலைக்கழிக்கப்படுகின்றோமே? என மக்கள் கண்ணீருடன் கூறிக்கொண்டு திரும்பி தங்கள் வாடகை வீடுகளுக்குச் சென்றிருக்கின்றனர்.

___________________________________________________________________________

உண்மைச் செய்திகளை எடுத்துவரும் மயிலிட்டி டொட் கொம்

மயிலிட்டி மக்களுக்கு,

தாயகத்திலிருந்து மக்கள் எங்களோடு தொடர்பு கொண்டு பொதுக்கூட்டங்களில், அமைப்புக்களில், நிர்வாகம் சார்ந்த தனி மனிதனாலும், கூட்டாகவும் தவறுகள் நடைபெறுகின்றது இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் நீங்கள்தான் துணிந்து எழுதுகின்றீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள், முதலில் தயங்கினோம் காரணம் பல இணையங்கள் இருக்கும்போது நாங்கள் மட்டும் ஏன் இதை செய்யவேண்டும் என்று பின்பு தாயகத்திலுள்ளவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் கூறியது பற்றி கேட்டபோது அதைவிட கூடுதலாக அறிந்துகொண்டோம். மயிலிட்டி டொட் கொம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல செய்திகளோடு பிறந்த நாள் வாழ்த்து, கவிதைகள் என்று இணையத்தை நிரப்பிவிட்டு இருக்க நாங்கள் விரும்பவில்லை மயிலிட்டி மக்கள் மத்தியில் நடை பெறும் அனைத்தையும் மக்கள் முன் எடுத்து வரும் ஊடகம் என்ற வகையில் மயிலிட்டி டொட் கொம் சொன்னால் அது உண்மையாக இருக்கும் என்று மக்கள் கூற வேண்டும் என்பதோடு, மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், ஆராய்ந்து சரியான விளக்கத்தை தெரிந்து கொண்ட பின்புதான் மக்களுக்கு தெரிவிக்கின்றோம். தாயகத்திலும் சரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி மயிலிட்டி மக்களின் ஒற்றுமையை குழப்பும் வகையில் சிலரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது.குறிப்பாக தாயகத்தில் வெள்ளை உடுப்புடன் உலா வரும் சிலர், மற்றும் வேறு சிலராலும்  மக்கள் விரும்பாத செயற்பாடுகள் நடைபெறுகின்றது. மயிலிட்டி மக்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு மக்களின் பணத்தை சுரண்டுகின்றார்கள். சமீபத்தில் நடந்தது ஒரு அமைப்பின் பெயரை சொல்லிக்கொண்டு ஒருவர் நிர்வாகத்திலுள்ளவர்களுக்கு தெரிவிக்காமல் கூட்டமைப்பு மற்றும் அமைப்புக்களை தனியாக சந்தித்து வருகின்றார் .நடந்து முடிந்த தேர்தலின்போது கூட்டமைப்பினரால் 12 பேரூந்துகளுக்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது 5 பேரூந்துகள்தான் ஒழுங்கு செய்யப்பட்டது மிகுதிப் பணம் பொருளாளரிடம் கொடுக்கப்படவில்லை. பணம் எங்கே போனது? ஊர்ஜிதப்படுத்தப்பாத செய்தி ஒன்றும் எங்கள் காதுகளுக்கு வந்தது இந்த வெள்ளை அங்கி மனிதர் வரும் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட மறைமுகமாக ஆயத்தங்களை செய்து வருவதாக இது உண்மையாக இருந்தால் மக்களின் பணத்திற்கு என்ன நடக்கும் சிந்தித்து பாருங்கள். ? மயிலிட்டிக்கு மக்களை விட்டால் பல கோடி ரூபாக்களை அரசாங்கமும் மக்களும் இவர்களிடம் கொடுத்தால் பணத்தின் நிலை என்ன. ? மயிலிட்டி ஆலயங்களுக்காக பாடல்களின் குறுந்தட்டு (CD) வெளியிட்டது நீங்கள் அறிந்தது அதற்காக முதன் முதல் சிறு தொகை பணத்தை மயிலிட்டி டொட் கொம்தான் கொடுத்து ஆரம்பித்து வைத்தது.  மேலதிகமாக பணம் சேர்க்கப்பட்டுள்ளது பல மாதங்களாகியும் உரியவர்கள் மிகுதிப் பணத்தின் கணக்கை மக்களுக்கு இன்றுவரை கையளிக்கவில்லை பல வெளி நாட்டு மக்கள் இவர்களை நம்பி கஸ்ரப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பணத்தை கொடுக்கின்றார்கள். பணத்தின் நிலை என்ன மக்களே சிந்தியுங்கள். ஊர் பணத்தை இவர்கள் கொள்ளையடித்தால் மக்களிடம் போய் எப்படி பண உதவி கேட்கமுடியும்.. தாயகத்தில் மயிலிட்டியின் பெயரால் இயங்கும் அமைப்புகள் இருக்கின்றன. இவற்றினுள் சிலவற்றுக்கு பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது மக்களுக்கு அறிவிக்காமல் தங்களை தாங்களே தலைவர், செயலாளர் என்று தெரிவு செய்துகொண்டு போயுள்ளார்கள். இதை அறிந்த சிலர் கூட்டத்திற்கு போயுள்ளார்கள். கூட்டத்தில் ஒரு வெள்ளை வேட்டிக்காறர் தன்னை ஒரு பதவிக்கு போடும்படி வாக்குவாதப்பட்டுள்ளார் மக்கள் அவரை போடமுடியாது என்று சொல்லியுள்ளார்கள் தன்னை உப தலைவருக்கு போடும்படி பிடிவாதம் பிடித்துள்ளார் இன்னுமொரு வெள்ளை வேட்டிக்காறர் இவரது நண்பர் மக்களிடம் விட்டுக்கொடுங்கோ என்று கேட்டுவிட்டு படிவத்தில் ஒரு பதவிக்கு தனது நண்பரான வெள்ளை வேட்டிக்காறரின் பெயரை யாருக்கும் தெரியாமல் எழுதியுள்ளார். பிறகு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை படிக்கும்போது மக்கள் இதை கண்டு திகைத்தார்கள். மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு ஏன் முக்கிய பதவிகளுக்கு சண்டை பிடிக்கின்றார்கள் மக்களுக்கு நன்மை செய்யவா பதவிக்கு அடிபடுகின்றார்கள்? தாயகத்தில் மயிலிட்டி மக்களால் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க வளாகத்தினுள் கலைமகள் சன சமூக நிலையம் என்று மக்களால் பெயர் வைத்து திறக்கப்பட்டது. இதை ஏற்கனவே நாங்கள் படிப்பகம் பக்கத்தில் இணைத்துள்ளோம். திறந்து ஒரிரு வருடம்தான் நிறைவடைந்துள்ளது. சிலர் இந்த பெயரை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாக அறிகின்றோம். மயிலிட்டி மக்கள் அனைவரும் கல்வி கற்ற பாடசாலையின் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.. சிலர் தங்கள் சுய. நலத்திற்காக இந்த பெயர் மாற்றத்தை செய்ய முயற்சிப்பதாக அறிகின்றோம் கேள்வி பெயரை மாற்றவேண்டிய அவசியம் என்ன?. சம்மந்தப்பட்டவர்களிடம் நாங்கள் கேட்பது பெயர் மாற்றத்தை நிறுத்தி மக்களின் ஒற்றுமைக்கு முன் நிற்கும்படி அன்போடு கேட்கின்றோம்.
உங்கள் கருத்துக்களை கருத்து தெரிவித்தல் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்
நன்றி
22-01-2014

 

___________________________________________________________________________

___________________________________________________________________________

ரணில், மைத்திரி, சந்திரிக்கா நாளை யாழ்.விஜயம்! எனக்கு எதுவும் தெரியாது: விக்கி
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நோக்கிலும் நாளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் விஜயம் செய்யவுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ள வடக்கு முதல்வர்,  அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

___________________________________________________________________________

கண்ணீர் அஞ்சலி

___________________________________________________________________________

பாராட்டு

திரு, திருமதி கருணாநிதி தம்பதிகள் இருவரும் சைவ சித்தாந்தம் படித்து பட்டம் பெற்றமைக்காக மயிலிட்டி மக்கள் சார்பாக நன்றியையும், பராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம். நன்றி

"சைவசித்தாந்த ரத்தினம் "சிறப்புப் பட்டம்

மயிலிட்டி  வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ர்காமில் (East Ham, London )வசித்து வரும் திரு நாகேந்திரம் கருணாநிதிக்கும் அவரின் மனைவி சதியேஸ்வரி கருணாநிதிக்கும் லண்டன் சைவமுன்னேற்றச்சங்கத்தின் ஆதரவில் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியில் தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்தினால்,மதிப்பிற்குரிய ஆசான் "செந்நெறிச் செம்மல் "திருவாளர் சூ.யோ.பற்றிமாகரன்[S.J.Fatimaharan BA, Special Diploma (Oxford), BSC, PG Diploma, MA (Politics of democracy), MA (Tamil) ]அவர்களால் லண்டனில் 2012 ஆம் ஆண்டு ஒரு வருடமாக நடத்தப்பட்ட சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிநெறியை நிறைவு செய்து ,அதற்கான வேலைத்திட்டத்தை (14 சைவசித்தாந்தசாத்திர நூல்களான திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார்,  இருபா இருபது,உண்மைவிளக்கம்,சிவப்பிரகாசம்,திருவருட்பயன்,வினாவெண்பா,போற்றி

ப்ப∴றொடை,கொடிக்கவி,நெஞ்சுவிடுதூது,உண்மை நெறி விளக்கம்,சங்கற்ப நிராகரணம் ஆகியவற்றுடன் ஞானாமிர்தம் மற்றும் திருமந்திரம் உட்பட 12 திருமுறைகள்)பூர்த்தி செய்து, சைவசித்தாந்தத்தை விளங்கிக்  கொண்டதை வெளிக்காட்டியதற்காக " சைவசித்தாந்த ரத்தினம் " சிறப்புப்  பட்டம் 20-09-2014 அன்று லண்டன் செட்ஜ்ஹில் பள்ளியின் கேட்போர் கூடத்தில் (London SedgeHill School Auditorium )லண்டன் லூசியம் சிவன் கோயிலும்,மலேசியா இந்து சங்கமும் சேர்ந்து நடாத்திய இரண்டாவது உலகத் திருமுறைப் பெருவிழாவில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 21 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்டது.

___________________________________________________________________________

நம்பமுடியாத விபத்து

பனி கொட்டும் நாடுகளில் வாழுகின்ற மக்கள் பனி கொட்டும் காலங்களில் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்தவும்.. அமெரிக்காவின் மிச்சிக்கன் மானிலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தை பாருங்கள். இந்த பாதையால் வாரத்தில் இரண்டு தரம் நாங்கள் சென்று வருவோம். இந்த விபத்து நடப்பதற்கு முதல் நாள்தான் நாங்கள் இந்த நெடுஞ்சாலையால் சென்றோம். அதற்காக இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி கூறுகின்றோம்.

நன்றி 09-02-2015

___________________________________________________________________________

50ம் ஆண்டு நினைவு அஞ்சலி


திரு அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்) அவர்களுக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் நன்றியை தெரிவிக்கின்றது.

23.12.1964 எமது ஊரில் மிகப் பெரிய ஒரு சூறாவளிப்புயல் ஏற்பட்டு இதில் 153 பேர் வரை கடலில் மரணித்ததாக தகவல் உள்ளது அதில் 96 பேர் மயிலிட்டி மக்கள் ஏனையோர் எம் ஊர் வள்ளங்களில் தொழில்புரிந்த ஏனைய ஊர் மக்கள்.

1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......

விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற

அறுபத்தி நான்கில் அலைகடல் ஓரத்தில்
பெரும்துயர் நடந்து போனது அன்று
ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்று
அன்றைய நினைவினை இங்கிதம் பகிர்கின்றேன்.

மண்ணில்ப் பிறப்பு நாமெடுக்கும் முன்பே
அள்ளுண்டு போநோர்க்கு அஞ்சலிகள் இன்று
பொல்லாத புயல் சொல்லாமல் வந்து
அந் நாளில் எம்மவர் உயிர் குடித்து சென்றதுவே.

மயிலிட்டிக் கரையில் மரண ஓலம்......
மாதாவின் பிள்ளைகளோ வாழ்விழந்த கோலம்......
மாரியம்மன் பக்தர்களோ விதவைகளாய் நின்றகாலம்......
மார்கழி இருபத்தி மூன்று மறக்க முடியாத சோகம்.....

பச்சிளம் பாலகர் படிப்பினைத் துறந்தனர்
தத்தளித்த குடும்பங்களின் தலைவர்கள் ஆயினர்
கட்டுமரம் ஏறி மீண்டும் கடல்மடி தவண்டனர்
தொண்ணூறு (15.06.1990) வரை கடலில் செல்வம் குவித்தனர்.

விண்ணகம் சென்றவர் சாந்தி பெற
மண்;ணிலிருந்து யாகங்கள் செய்கின்றோம்
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....

அரை நூற்றாண்டு அமரர்களே
அடைந்திடுவீர் சாந்தி
ஆண்டவரின் பாதத்தில்
நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடுக

1964ல் சூறாவளியில் காலமானவர்களின் பெயர் விபரம்.

1)    மிக்கேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை   
2)  கிறிஸ்து அந்தோனிமுத்து
3)  அந்தோனிமுத்து வேதநாயகம்
4)  செல்லத்துரை
5)  பாக்கிநாதன்
6)  கலித்தர் சந்தியாப்பிள்ளை
7)  இரத்தினர் ஜெயராமன்
8)  செல்லத்துரை
9)  கணபதிப்பிள்ளை
10) கணபதிப்பிள்ளை துரை
11) சரவணணை கந்தசாமி
12) சரவணனை செல்வராஜர்
13) கந்தசாமி
14) ஐயாச்சாமி ஆனந்தவேல்
15) பெரியதம்பி
16) ஐயாத்துரை
17) தேவசகாயம் அருளப்பு
18) ஆ.மார்க்கண்டு
19) சவரிமுத்து
20) சி.அழகரட்ணம்
21) நல்லையா
22) வல்லிபுரம்
23) சாம்பசிவம்
24) சிவனெளி
25) பச்சடியார்
26) சுப்பையா
27) சின்னராசா
28) இராமசாமி

29) இராசகனி
30) இராசலிங்கம்
31) ஆனந்தராசா
32) கந்தையா மருகன் --------
33) முருகேசு (ஆனையிறவு)
34) விசுவலிங்கம் தம்பியய்யா
35) கந்தசாமி (சுறுக்கன்)
36) சின்னத்துரை குமாரசாமி
37) முத்தையா ஐயாத்துரை
38) சின்னத்துரை செல்லச்சாமி
39) மாணிக்கர் இராசையா
40) துரைராசா
41) செல்லக்கண்டு மகன்-------
42) சாபாபதி இலச்சுமிகாந்தன்
43) செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை
44) இரத்தினம்
45) சின்னத்தம்பி அர்சுனன்
46) வாவாசிங்கம்
47) செல்லத்தம்பி சின்னத்துரை
48) கனகசபை
49) சண்முகம்
50) தங்கலிங்கம்
51) பராசிங்கம்.
53) சின்னர் திருச்செல்வம்
54) யோசேவ்
55) அமிர்தநாதர்
56) சின்னத்தம்பி

மேலேயுள்ள பெயர்கள் பல மயிலிட்டியில் அழைக்கப்பட்ட பெயர்களாகவுள்ளன இவர்களின் முழுப்பெயர்தெரிந்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இதனை பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.அத்துடன் இந்தப் பெயர்பட்டியல்களில் இல்லாதவர்களின் விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனைப் பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.

மயிலிட்டி மக்களின் ஒருவனாய்

அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)

தொலைபேசி :-0041 61 481 15 87
மின்னஞ்சல் :- gganton65@hotmail.com
skype ID ;- gnanapragasam35
இதில் தங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும்,கருத்தையும் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி

___________________________________________________________________________

கடிதம்

திரு அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட கடிதம்.

 

___________________________________________________________________________

___________________________________________________________________________

___________________________________________________________________________


11-07-2014 அன்று மக்கள் மயிலிட்டி ஆலயங்களுக்கு சென்று வழிபட்டபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள. மட்டும் ஏற்பாட்டாளர்களால் எங்களுக்கு அனுப்பப்பட்டது. நன்றி

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களின் 11வது இணையத்தளம்

மயிலிட்டிக்கு ஏற்கனவே 9 இணையத்தளங்கள் இருக்கின்றது. சமீபத்தில் 10வது இணையத்தளம் மக்களுக்கான அறிவித்தலோடு முதற் பக்கம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 11வது இணையத்தளம் ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது விரைவில் இணையத்தில் பார்க்கலாம். மயிலிட்டி மக்களின் ஊக்கத்தையும், ஒற்றுமையையும் இணையத்தளங்களின் வரவின் வாயிலாக அறியமுடிகின்றது. புதிய இணையங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.  நன்றி - 03-10-2013

___________________________________________________________________________

அறிவித்தல்


வெளி வராத சில செய்திகள் வெளி வந்துள்ளது. சமீபத்தில் மயிலிட்டி மக்கள் சிலரின் வீடுகள் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு பயமுறுத்தப்பட்டுள்ளது, ஒருவர் வீட்டு கதவுகள் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது, இன்னொருவர் வீட்டு கதவுகள் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது, வேறு ஒருவருடைய வீடு கடையுடன் சேர்ந்தது பாதுகாப்பிற்காக கணவன் மனைவி இருவரும் கடையினுள் உறங்கிக் கொண்டிருந்தபோது கத்தி, வாள், கை கோடாலிகளால், கடையின் கதவுகளை உடைத்தபோது கணவன் மனைவி இருவரும் பின் கதவால் தப்பிவிட்டார்கள். ஆனால் வந்தவர்கள் கடையிலிருந்த பொருட்களை கொள்ளையிட்டதுடன் இரண்டு மலர் வளையங்களையும் வைத்துவிட்டு போயுள்ளார்கள் மூவரும் தப்பிவிட்டார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் தற்போது பயம் கலந்த சோகத்தோடு இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எங்களால் என்ன செய்யமுடியும்??  நன்றி 29-12-2013

___________________________________________________________________________

ஞானராணி (பாப்பா) ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

___________________________________________________________________________

பிரித்தானியாவில் மகஜர் கையளிக்கபட்டது

பிரித்தானியாவில் 31. 01. 2014 அன்று பாராளுமன்ற வளாகத்தில்  ஈழத்தில் நடக்கும் நில அபகரிப்பிற்கு எதிரான மாகாநாடு நடைபெற்றது. பிரித்தானியா மயிலிட்டி மக்கள் சார்பாக திரு.கருணாநிதி, திரு. பரணி இருவரும் கலந்துகொண்டு மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பாராளு மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை ,பிரதேசசபை உறுப்பினர்கள், BBC, உட்பட  வெளிநாட்டு, இந்திய உடகவியலாளர்கள் மற்றும் பல நாடுகளிலிருந்து வந்த மனித உரிமை ஆவலர்கள் ஆகியோரிடம் மகஜர் கையளிக்கபட்டது. அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை நன்றியை தெரிவிக்கின்றது.

___________________________________________________________________________

உயிர்வரை இனித்தாய் திரைப்பட வெளியீட்டு திருநாள்.


எதிர்வரும் 22.03.2014 பகல் 13.00 மணிக்கு ஆரம்பிக்கின்றன வெளியீட்டுவிழாவின் ஆரம்ப நிகழ்வுகள்... 14.00 மணிக்கு திரைப்படம் ஆரம்பம்
டென்மார்க் கேர்னிங் பயோ சிற்றி திரையரங்கில்..
இரண்டு பிரமாண்டமான திரையரங்குகளில் ஒரே நேரத்தில். தமிழில் ஒரு திரையரங்கில் - டேனிஸ் சப்டைட்டிலுடன் இன்னொரு திரையில்...
தமிழகம், பிரான்ஸ், இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்...
டென்மார்க்கின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கிறார்கள்..
கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பு..
சுவை தரும் பல்வேறு நிகழ்வுகளுடன் திரையிடப்படுகிறது முதற் காட்சியாக
உயிர்வரை இனித்தாய்.
மறந்துவிடாதீர்கள் இது ஒரு திரைச்சினிமா திருவிழா...
ஒரு முறை பார்த்தால் உயிர்வரை இனிக்கும்..
மயிலிட்டியின் மகள் செல்வி நர்வினிடேரி அவர்களின் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் வெற்றி பெற அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை  வாழ்த்துகின்றது.
நன்றி

___________________________________________________________________________

மீழ் குடியேற்றம்

தாயகத்தில் மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பொறுப்பாளர்கள் யாழ் கட்டளை தளபதியையும், ஜனாதிபதியையும் மீழ் குடியேற்றம் சம்மந்தமாக சந்தித்தனர்.
நன்றி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பொறுப்பாளர்களுக்கு.
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை 
அனைத்துலக மயிலிட்டி மக்கள்

___________________________________________________________________________

மயிலிட்டி கலைமகள் பாடசாலை

மயிலிட்டி கலைமகள் பாடசாலையில் மேடை அமைப்பதற்காக அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை சிறு உதவியை வழங்கியிருந்தது.
நன்றி
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை 


 

___________________________________________________________________________

புத்தக வெளியீடு
எமது பக்கத்து கிராம நண்பர் திரு ந.முறளீதரன் அவர்களின் “உரையாடல்” புத்தக வெளியீடு 25-01-2014 அன்று கனடாவில் நடைபெற்றது. மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை சார்பாக கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

___________________________________________________________________________

மயிலிட்டி கடற்றொழிளாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் பேட்டி


தாயகத்தில் மயிலிட்டி கடற்றொழிளாளர் கூட்டுறவுச் சங்க தலைவரும்  வலி வடக்கு மீழ் குடியேற்றக் குழுவின் உப தலைவருமான திரு சு.யோகராஜா அவர்கள் தைப்பொங்கல் தினத்தன்று யாழ் பத்திரிகைக்கு அழித்த பேட்டியில் அடுத்த தைப்பொங்கலை மயிலிட்டியில் பொங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
நன்றி திரு வினோ 24-01-2014

___________________________________________________________________________

ஒன்று கூடல்


கனடாவில் 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கதின் குளிர்கால  ஒன்றுகூடலின்போது எடுக்கப்பட்ட சில  புகைப்படங்கள். நன்றி திரு ந.முரளிதரன்

___________________________________________________________________________

மயிலிட்டி ஆலயங்களின் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் பாடல்களின் வெளியீட்டு நிகழ்வு புகைப்படங்கள்.


நேரடி ஒளிபரப்பு செய்யாமல் போனமைக்காக மயிலிட்டி மக்களிடமிருந்து எமக்கு பல மின் அஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. தாயகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தார்கள். நாங்கள் மிகவும் சந்தோசத்துடன் அனைத்து ஏற்பாடுளையும் செய்து கொடுத்திருந்தோம். ஆனால் ஒளிபரப்பு நடை பெறாமல் போனதிற்கு காரணம் அதை செய்வதற்கு ஏற்பாட்டாளர்களால் தாயகத்தில் நியமிக்கப்பட்டவர் விட்ட தவறினால் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாமல் போய்விட்டது அதற்காக நாங்கள் மிகவும் மனம் வருந்துகின்றோம். தற்போது சில புகைப்படங்களை இணைத்துள்ளோம் விரைவில் அந்த நிகழ்வை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்கின்றோம். இவற்றை சுட்டி காட்டிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
நன்றி 24-12-2013
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை

___________________________________________________________________________

மயிலிட்டி ஆலயங்களின் மீதெழுந்த தெய்வீக ராகங்கள் பக்திப் பாடல்களின் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை வாழ்த்துகின்றது. நன்றி
மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை 19-12-2013




___________________________________________________________________________

ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை, 03 மார்கழி 2013 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது இடம் பெயர்ந்த மக்களையும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது மயிலிட்டி மக்கள் சார்பாக வலி வடக்கு மயிலிட்டி மீழ் குடியேற்ற குழு மகஜர் கையளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன நன்றி 03-12-2013

___________________________________________________________________________

மயிலிட்டி பெயர் மாற்றம்

தாயகத்து மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க நிர்வாகத்தினருக்கு நன்றிகள்
தாயகத்து மக்களோடு சேர்ந்து பல மாதங்களாக மயிலிட்டி டொட் கொம்மில் அனைத்துலக மயிலிட்டி மக்கள் அனைவரும் வாக்களிப்பு செய்து மயிலிட்டிதான் வேண்டும் என்று மக்கள் தந்த பதிலை உங்களுக்கும் தந்திருந்தோம்.
அதற்கு நீங்கள் தந்த பதிலில் இருந்து நீங்களும் பெயர் மாற்றத்தை விரும்பவில்லை என்பது தெரிகின்றது.
உங்களின் பொதுக்கூட்டத்திலும் மக்கள் மயிலிட்டியைத்தான் விரும்புவார்கள் என்பது எங்களின் உறிதியான நம்பிக்கை. எனவே வரும் பொதுக்கூட்டத்தில் ஏகோபித்த முடிவாக மயிலிட்டி என்று பெயர் மாற்றம் செய்கின்றோம் என்று அறிவிப்பீர்கள் என்று மயிலிட்டி மக்களோடு நாங்களும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
.பெயர் மாற்றம் செய்து முடிப்பதற்கு பல மாதங்களாகும் என்பது தெரியும் ஆனால் தாயகத்தில் மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஒரு முக்கிய ஸ்தாபனம் என்பதனால் முதலில் மாற்றம் செய்கின்றோம் என்ற மக்களுக்கான செய்தியை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம். நன்றி  
மயலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை
அனைத்துலக மயிலிட்டி மக்கள்
இந்த பெயர் மாற்றத்தோடு சம்மந்தப்பட்டவர்கள் சமீபத்தில் மீண்டும் ஒரு அமைப்பிற்கு மயிலிட்டிதுறை என்று பெயரிட்டுள்ளார்கள் அதன் விபரம் விரைவில் தருகின்றோம். .நீங்கள் படிப்பதோடு நின்றுவிடாமல் இவர்களுக்கான உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்போதுதான் இவர்கள் செய்வது சரியா தவறா என்று அவர்களும் புரிந்துகொள்வார்கள்.
23-11-13

கருத்துக்களுக்கு/ COMMENTS

___________________________________________________________________________

மயிலிட்டி வடக்கு மக்களை சீமெந்து தொழிற்சாலை அருகில் மீளக்குடியேற்ற முயற்சி!
மக்கள் எதிர்ப்பு


மயிலிட்டி மக்களை மாவிட்டபுரம் சீமெந்து தொழிற்சாலைக் காணியில் குடியமர்த்துவதற்குத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.
இது தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற கிராம சேவையாளர்களிடம் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் தமது சொந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
வலி.வடக்கில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 384 ஏக்கர் சொந்தக் காணிகள், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்குள் உள்ளடங்கும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மயிலிட்டி வடக்கு (J//246)  பலாலி விமானத்தளம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்களை, கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் காங்சேன்துறை சீமெந்து ஆலைக்குச் சொந்தமான காணியில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மயிலிட்டி வடக்கில் மீளக் குடியமர்வதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், வேறிடத்தில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைக்காக 60 பேர் வரையிலேயே பதிவு செய்துள்ளனர்.
தமது சொந்த இடங்களே தமக்குத் தேவை என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் சிமெந்து ஆலைக் காணியில் மீளக் குடியமர மறுப்புத் தெரிவித்துள்ளனர். 23-11-13

___________________________________________________________________________

வலி. வடக்கு மக்களால் ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஆரம்பம்!




வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது.
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது நிலங்களை மீளவும் வழங்க வேண்டும், மக்களுடைய வீடுகளை கண்மூடித்தனமாக அழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரியும் வலிகாமம் வடக்கு மக்கள் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
இன்றைய போராட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் 500ற்கும் மேற்பட்ட மக்கள் இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பதாகைகள், மற்றும் எதிர்ப்பு கோசங்கள் இல்லாமல், மிகவும் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வலி. வடக்கு பகுதியில் பாரிய இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் ஏராளமான  மக்கள் கலந்து கொண்டதுடன் எமது நில மீட்பு தொடர்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எமது தாயகமான வட-கிழக்கு பகுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது இது தொடரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவான், எஸ். சிறிதரன், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.க. சிவஞானம், கல்வி அமைச்சர் பி. குருகுலராசா மற்றும் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், க. பரஞ்சோதி மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இடம் பெயர்ந்த மக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் இரு கிராமசேவகர் பிரிவுள் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும், மக்கள் அதில் ஏமாற்றமடையாமல் இன்றைய போராட்டத்தில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று போராட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தெல்லிப்பளை தொடக்கம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் வரையிலான காங்கேசன்துறை வீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், வழக்கம்போல் பல இடங்களில் போராட்டத்திற்கு வந்த மக்கள் திருப்பியனுப்பப்பட்டுமுள்ளனர்.
நன்றி லங்காசிறி மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும். 12-11-2013

___________________________________________________________________________


தாயகத்தில் மயிலிட்டி கோயில்களுக்கான குறுந்தட்டு C D யாக பாடல் வெளியீடு


மயிலிட்டி கோயில்களுக்கான பாடல் வெளியீடு பற்றிய அறிவித்தல் அறிவித்திருந்தோம் தெரிந்தது. பாடல் வெளியீட்டின் ஏற்பாட்டாளர்கள் அதுபற்றிய ஒரு அறிக்கையை மக்களுக்காக வெளியிட்டுள்ளார்கள். மக்களால் பண உதவி செய்யப்பட்டதின் விபரங்களும் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் அமைந்துள்ளது. குறுந்தட்டு C D யின் பாடல் வெளியீட்டு ஏற்பாட்டாளர்களுக்கு இந்த முயற்சி நல்ல விதமாக அமைந்து வெற்றி பெறவேண்டும் என்று அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றது.
நன்றி - 04-08-2013

 




கருத்துக்களுக்கு/ COMMENTS

___________________________________________________________________________

மயிலிட்டி எங்கே?
மயிலிட்டி உலக வரை படத்திலிருந்து மறையுமா?


வீதிக்கு வடக்கே
தற்போது நாங்கள்  அறிந்ததை  வைத்து பார்க்கும்போது  மயிலிட்டி என்ற கிராமம் உலக வரைபடத்திலிருந்து  விரைவில்  மறைந்துவிடும் என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. காரணம் மயிலிட்டி காங்கேசன்துறையோடு ஒரு பகுதி போய்க்கொண்டிருக்கின்றது மற்ற பகுதி பலாலியோடு சேர்ந்துகொண்டிருக்கின்றது பிறகு மயிலிட்டி என்று அழைக்க என்ன இருக்கப்போகின்றது. தற்போதுள்ள நிலமை அப்படித்தான் இருக்கின்றது. சில காரணங்களுக்காக நாங்களும் இங்கே அடக்கி வாசிக்கவேண்டியுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி மயிலிட்டிக்கு மக்கள் மீள குடியேறுவதற்கு 100 இல் ஒரு வீதம் கூட வாய்ப்பு இல்லை புதியவர்கள் யாராவது வந்தால் சிலவேளை மாறலாம் ஆனால் அதற்கான அறிகுறியும் இல்லை. தற்போது அகதிகளாக இருக்கும் மக்களை வைத்து காய் நகர்த்துகின்றார்கள் நல்லது நடந்தால் சரி இல்லாவிட்டால் மயிலிட்டி என்ற எங்கள் தாய் மண் மறைவதை யாராலும் தடுக்கமுடியாது. தற்போது வீதிக்கு வடக்குப் பக்கமுள்ள நில விபரங்களை உங்களுக்கு தருகின்றோம் காங்கேசன்துறையிலிருந்து பலாலிவரை வீதிக்கு வடக்குப் பக்கம் எல்லாமே தரைமட்டமாக காட்சியளிக்கின்றது. காங்கேசன்துறையிலிருந்து பலாலிவரை றோட் அருகோடு போஸ்ற் நட்டு வேலி அதன் அருகே வீடுகளை இடித்த கல் மண்களைக்கொண்டு நீளமாக அரண்போல் அமைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து தையிட்டிக்கு பக்கம்வரை மிகவும் நவீன வசதிகள் கொண்ட அழகான விடுதிகள், வீடுகள் போன்ற பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இப்படியான நவீன கட்டிடங்கள் யாழ்ப்பாணத்தில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகின்றது. மேலும் மயிலிட்டி பக்கமாக தொடருகின்றது. இடையிடையே புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மயிலிட்டி சந்தியிலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் காச நோய் வைத்தியசாலைவரை மற்றப் பக்கம் காளவாய்வரை வெளியாக கடல் தெரிகின்றது அம்மன், முருகன் ஆலயங்கள் இருக்கின்றது. நாவலடியில் வீரபத்திரர் கோயில் மண்டபம் விறாந்தை எதுவும் இல்லை இடிபாடுகளுடன் இருக்கின்றது வைரவர் கோயில் அப்படியே இருக்கின்றது இராணுவத்தினர் பராமரிக்கின்றார்கள் ஆலமரம், அரசமரம் பெரிதாக வளர்ந்து இருக்கின்றது. ஆலமரத்திற்கு கீழே வாலிபர்கள் இருந்து கதைக்கும் சிகப்பு கலர் குந்து இடிந்தபடியே சரிந்து இருக்கின்றது.  வீரபத்திரர் கோயிலுக்கு நேராக ஒரு உயர்ந்த வீடு வீட்டோடு மலசல கூடம் இருக்கின்றது. அடுத்தது பிள்ளையார் கோயிலுக்கு நேராக கடற் கரையோடு புதிதாக மிகவும் பெரிய கட்டிடம் கட்டி யோக்கற் தொழிற்சாலை செயற்படுகின்றது. அதற்குப்பக்கத்தில் மிகப் பெரிய புதிய அழகாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது வீதிகள் அழகாகவும் பார்ப்பதற்கு விருந்தினர் மாளிகைபோல் காட்சியளிக்கின்றது. சிங்கள மக்கள், பஸ்கள் போய்வருகின்றன. கடற்கரையோடு மண்ணை கொட்டி உயர்த்தி தண்ணி அரிக்காமல் அதன் அருகே பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது மயிலிட்டியில் எந்த ஒரு ஒழுங்கையையும் எங்கே இருந்தது என்று சொல்லவே முடியாது அந்தளவுக்கு எல்லாம் அழித்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. என்னும் ஒரு வருடத்தின் பின் மயிலிட்டியில் மக்கள் வாழ்ந்ததிற்கான அனைத்தையும் அழிக்கப்படுவிடும். அத்தோடு மயிலிட்டி மக்கள் மீள குடியேற முடியாதபடி நிலப்பரப்பு முழுவதும் அவர்களது புதிய கட்டிடங்கள் வந்துவிடும் ஆகவே இப்படியான கட்டிடங்கள், தொழிற்சாலைகள், விடுதிகள், வீடுகள், வேலிகள், என்று பல மில்லியன் பணத்தை செலவு செய்வது மயிலிட்டி மக்களை மீள குடி அமர்த்தவா? ஆரம்ப காலங்களில் புகைப்படக்கருவி கொண்டு போவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது தற்போது அனுமதிக்கவில்லை ஏன், எங்களுக்கு தெரிந்தது இவ்வளவு தெரியாமல் எவ்வளவு இருக்கும். இத்துடன் இதை முடிக்கின்றோம்.
விரைவில் வீதிக்கு தெற்கே யுடன் தொடருகின்றோம் அதுவரை மயிலிட்டி டொட் கொம்முடன் இணைந்திருங்கள்.

இது சம்மந்தமான உங்களின் கருத்துக்களை எதிர் பார்க்கின்றோம்

கருத்துக்களுக்கு/ COMMENTS

___________________________________________________________________________

நவநீதம் பிள்ளை அம்மையாரிடம்
மயிலிட்டி மக்கள் மனு கையளிப்பு


ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வந்தபோது மயிலிட்டி இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்ற குழு அம்மையாரை சந்தித்து கலந்துரையாடி மனு கொடுப்பதற்காக ஒரு பஸ்ஸில் மயிலிட்டி மீள் குடியேற்ற குழு சார்பாக பலர் சென்றிருந்தார்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் பலரை சந்திக்கவேண்டியுள்ளதால் ஒருவரை மட்டுமே சந்திக்க அனுமதியளித்திருந்தார்கள் அதனால் ஒருவர் மட்டுமே உள்ளே சென்று அம்மையாரை சந்தித்து பேசி மனுவை கையளித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி - 27-08-2013

___________________________________________________________________________

மயிலிட்டி கோயில்களின் வழிபாட்டுக்கு
மக்கள் செல்கின்றார்கள்


மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் எதிர் வரும் 06-09-2013 வெள்ளிக்கிழமை அன்று மயிலிட்டி கோயில்களின் வழிபாட்டுக்கு மக்கள் செல்வதற்கான ஏற்பாட்டை செய்து அனுமதி பெற்றுள்ளார்கள். அதற்கான அறிவித்தலை எங்களுக்கு தந்துள்ளார்கள். பயண ஒழுங்குகள் வழமையான இடங்களிலிருந்தும்  சங்க வளாகத்திலிருந்தும் காலை 6.30 மணிக்கு பேரூந்துகள் புறப்படவுள்ளது. தெல்லிப்பழை மாவிட்டபுரம் காங்கேசன்துறை வழியாக மயிலிட்டியை சென்றடைவார்கள். குறிப்பு:- தவிற்கமுடியாத காரணத்தால் பயணத்தில் மாற்றம் இருந்தால் இரண்டு நாட்களுக்கு முதல் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு வினோ 771733231 ,யோகராசா 772830468 இவர்களுடன் தொடர்பு கொள்ளவும் நன்றி - 25-08-2013

___________________________________________________________________________

அருண்குமார் அவர்கள் கருத்து தெரிவித்தல் பக்கத்தில் எழுதிய கடிதத்திற்கு பதில்

அருண்குமார் இரண்டு இணையத்தளம், Facebook இவைகளை சொந்தமாக வைத்து நடத்துகின்றீர்கள் அவற்றில் உங்களின் அறிவித்தலை போடாமல் மயிலிட்டி டொட் கொம்மில் போடவேண்டிய அவசியம் என்ன? இங்கே போட்டபடியால் இதற்கான பதிலை தரவேண்டியுள்ளது.
இது இரண்டு வருடத்திற்கு மேலாக மயிலிட்டி டொட் கொம்மில் நடைபெற்றுக்கொண்டிருக்கம் விடயம்.
மீழ்குடியேற்ற குழுவுடனும், வரசித்தி விநாயகர் பரிபாலன சபையுடனும் ஆலோசனை செய்தோம். மயிலிட்டி என்று மாற்றம் செய்யமுடியும் என்று உறுதி அளித்திருந்தனர் என்று எழுதியுள்ளீர்கள்.
விநாயகர் பரிபாலன சபையின் தலைவர் இல்லாததனால் தலைவருக்கு பதிலாக இருக்கும் உப தலைவர் திரு சிவஞானராஜா (மகேஸ்) அவர்களோடும், மீள் குடியேற்றக் குழுவின் செயலாளர் திரு இளங்குமரனோடும் வேறு சிலரோடும் நாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டதிற்கு அவர்கள் தந்த பதில்  அருண்குமார் தாயகத்தில் நின்றபோது அருண்குமாரோடோ, அருண்குமார் இல்லாமலோ, அல்லது இன்றுவரை பெயர் மாற்றம் சம்மந்தமாக எந்தவிதமான ஆலோசனைக்கூட்டமும் நடைபெறவில்லை என்றும், இரண்டு குழுவாலும் அப்படி அருண்குமார் கூறுவதுபோல் உறிதி அழிக்கப்படவில்லை என்றும் இருவரும் கூறுகின்றார்கள். எந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி யார்  அருண்குமாருக்கு உறுதி வழங்கியது என்று எங்களையே கேட்கின்றார்கள்.
நாங்கள் இது பற்றி கேட்டபோதுதான் இப்படி ஒன்று நடந்திருப்பது அவர்களுக்கே தெரியும்.
உப தலைவர் மகேஸ் எனக்கு தெரியாமல் நான் இல்லாமல் இப்படி ஒன்று நடக்கமுடியாது எனவே இந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறுகின்றார்.
அத்துடன் கடற்தொழிலாளர்  சங்கத்தினருடன் ஆலோசனை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று எழுதியுள்ளீர்கள் ஆலோசனை செய்ய விரும்பினால் நீங்கள் முதலில் க.தொ சங்கத்துடன்தான் கதைத்திருக்கவேண்டும் காரணம் சங்கம்தான் அரசாங்கத்தில் பதியப்பட்டு பல முக்கிய செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் முக்கிய அமைப்பாகும். சங்கம் மாறினால் மற்றவை எல்லாம் சுலபமாக மாறிவிடும்.
யாழில் தங்கியிருந்த உங்களால் சங்க பொறுப்பாளர்களுடன் ஆலோசைன நடத்துவது ஒன்றும் பெரிய  விடயம் இல்லை.
அத்துடன் நீங்கள் சங்க வளாகத்தினுள் போனதாகவும் சங்க பொறுப்பாளரகள் அனைவரையும் சந்தித்ததாகவும் கூறுகின்றார்கள் இப்படி இருக்க எப்படி சங்கத்தினருடன் ஆலோசனை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று கூறுவீர்கள்.
உங்கள் தகப்பனார் திரு குணபாலசிங்கம் அவர்கள் இரண்டு குழுவிலும் இருக்கின்றார் நீங்கள் தகப்பனாரோடு கதைத்ததைத்தான் இரண்டு குழுக்களோடு ஆலோசனை செய்ததாக சொல்லுகின்றீர்கள். என்று நினைக்கின்றோம் அப்பாவுடன் ஆலோசனை செய்தேன் என்று சொல்லவேண்டியதுதானே ஏன் இந்த மறைப்பு.
ஒரு அமைப்பின் பெயரை மாற்றுவதாயின் தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களோடும் பொதுக்கூட்டம் கூட்டி முடிவு செய்ய வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான கருத்து. இல்லாவிட்டால்?
இரண்டு வருடத்திற்கு மேலான வாக்கெடுப்பில் மக்கள் தந்த பதிலும், உரையாடுதல், அன்ரன் ஞானப்பிரகாசம், Rebuja Sathananthan போன்றோரின் கடிதங்களும்தான் அனைத்து பெயர் மாற்றத்திற்கான காரணங்கள் என்று நம்புகின்றோம்.  
மீழ்குடியேற்ற குழு பெயர் மாற்றம் செய்ததை சி. டி வெளியீடு பற்றி எங்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தின் மூலம் அறிந்தபின் மக்களின் விருப்பதிற்கு மதிப்பளித்து பெயர் மாற்றம் நடந்தது என்று நாங்கள் நம்பித்தான் மீழ்குடியேற்ற குழுவுக்கு நன்றி கூறி மயிலிட்டி டொட் கொம்மில் எழுதியவுடன் உங்களின் கடிதத்தைதை இங்கே இணைத்துள்ளீர்கள். அப்படியானால் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?
எமது செய்தியில் உண்மை இல்லை என்பதுபோல் நீங்கள் எங்கள் இணையத்திலேயே எழுதியதாலும், அமைப்புகள் சம்மந்தப்பட்டதனால் மயிலிட்டி டொட் கொம்மும் சேர்ந்து செய்கின்றது என்று நம்பிவிடக்கூடாது என்பதற்காகவும், பிரான்சுடன் நடந்தது போன்று எனியும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவும், உண்மை மறைக்கப்படக்கூடாது என்பதற்காகவும்தான் உரியவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு நிஜத்தை எழுதியுள்ளோம்
இது மயிலிட்டி டொட் கொம் ஆரம்பித்தது தொடர்ந்தும் முடிந்தவரை முயற்சி செய்வோம்.
தாயகத்திலிருந்து பலர் தொடர்பு கொண்டு பெயர் மாற்றம் செய்வதற்காக ஆலோசனை கூட்டமோ, அல்லது பொதுக்கூட்டமோ நடைபெறவில்லை. தாயகத்தில் இணையத்தை பார்க்கும் வசதி மிக மிக குறைவு அதனால் எங்களுக்கு தெரியாமல் உண்மை இல்லாத செய்திகளை வெளிநாடுகளில் பரப்புகின்றார்கள் எனவே இது ஒரு தவறான செய்தி உடன் எடுங்கள் என்கின்றார்கள்.
அருண்குமார் உங்களிடம் அன்போடு கேட்பது உண்மை இல்லாத செய்திகளை மயிலிட்டி டொட் கொம்மில் எழுவதை தயவு செய்து தவிர்க்கவும். இப்படியானவற்றை உங்களின் இணையங்களில் போடவும். மக்களுக்கு தேவையான ஆக்கபூர்வமானவற்றை வரவேற்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
நன்றி - 18-08-2013

___________________________________________________________________________

தாயகத்தில் மயிலிட்டி மக்களால் நிறுவப்பட்ட சந்தை

___________________________________________________________________________

மயிலிட்டி மக்களின் பாவனைக்காக மயிலிட்டி கடல் தொழிலாளர் கிராமிய அமைப்பு கடலுணவு ஏல விற்பனை நிலையம் 10-08-2013 அன்று திறந்து வைக்கப்பட்டது

___________________________________________________________________________

மயிலிட்டி மக்கள் ஆலயங்களுக்கு செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு,

இலங்கையின் வடக்கே வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்புப் பிரதேசமாகிய மயிலிட்டி பகுதியில் உள்ள முருகன், அம்மன், பிள்ளையார் ஆலயங்களிற்கு வழிபாடு செய்வதற்காக, 1000 பேருக்கு முன் அனுமதி பெற்றிருந்த போதிலும் பொது மக்களின் எண்ணிக்கையை இராணுவத்தினர் 200 என்று மட்டுப்படுத்தியதனால், ஆலயங்களுக்குச் செல்லாமலேயே மக்கள் வீடுகளுக்குத் திரும்பியிருக்கின்றனர். எண்ணூறு தொடக்கம் ஆயிரம் பேர் வரையில் அங்கு செல்வதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், வெள்ளியன்று அவ்வாறு செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இடம் பெயர்ந்துள்ள மக்கள் மயிலிட்டி பகுதியில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது. அமைச்சரின் ஏற்பாட்டிற்கமைவாக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுக்களின்போது, எண்ணூறிலிருந்து ஆயிரம் பேர் வரையில் வெள்ளிக்கிழமை நான்கு கோவில்களுக்குச் செல்வதற்கும், அதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை 30 பேர் அந்த ஆலயங்களுக்குச் சென்று அவற்றைத் துப்பரவு செய்து பூஜை வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்வதற்கும் இராணுவத்தினர் இணங்கியிருந்தார்கள். அதற்கமைய செவ்வாயன்று ஆலயங்களுக்குச் சென்று துப்பரவு செய்துவிட்டு, வெள்ளியன்று காலை அறிவித்திருந்ததற்கமைய ஆயிரம் பேர் வரையில் காலை எட்டு மணிக்கெல்லாம் இருபது பஸ் வண்டிகள் 3 வான்களில் மாவிட்டபுரம் இராணுவ சோதனைச்சாவடிக்குச் சென்றிருந்த போதிலும், 200 பேரை மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று இராணுவத்தினர் அமைச்சரின் இணைப்பாளரிடம் தகவல் தெரிவித்திருந்ததாகவும், இதனால் எவருமே கோவில்களுக்குச் செல்லாமல் திரும்பிவிட்டதாகக் கூறினார்கள்
மிகவும் கவலை தரக்கூடிய செய்தி வீதியிலிருந்து றோட் பார்க்கும்போது கடல் தெரிகின்றதாம் எல்லாம் தரைமட்டமாக இருப்பதாக தெரிவிக்கின்றார்கள். விரைவில் முழு விபரமும் தருகின்றோம் அதுவரை பொறுத்திருக்கவும். நன்றி
நன்றி திரு கருணாநிதி அவர்களுக்கு



___________________________________________________________________________

உண்மைக் கதை, கனடாவில் மயிலிட்டி மக்களின் நிலை என்ன ??

1, முதலாவது மயிலிட்டி சங்கம் பிரிக்கப்பட்டது வெளியூர் கிராமத்தவர்களுடன் நிகழ்வுகள் தற்போது நடைபெறுகின்றது.
2, இரண்டாவது உ த பிரிக்கப்பட்டது ஒற்றுமையை குழப்பி அழிக்கப்பட்டது.
3, மூன்றாவது நா க த அ பிரிக்கப்பட்டது. தற்போது மூன்று பிரிவுகளாக பிரிந்து சண்டையிடுகின்றார்கள்.
4, நான்காவது நா க த அ பத்திரிகை பிரிக்கப்பட்டது. இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது.
5, ஐந்தாவது மா வீ தி பிரிக்கப்பட்டது 50 மக்கள் கூட இல்லாமல் இரண்டாவது நிகழ்வு நடைபெற்றது.
6, ஆறாவது வலி வடக்கு மக்களை மீள குடியேற்ற உதவுவதற்கு கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட குளு இரண்டாக பிரிக்கப்பட்டது
7, ஏழாவது தற்போது இல்லை விரைவில் எதிர் பார்க்கலாம்.
அண்மையில்  நடந்த வலி வடக்கு மீள் குடியேற்ற கலந்துரையாடலில் பல கிராம மக்களால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவரை கடந்த காலப் பொதுவாழ்வினைச் சொல்லி அவரை நியமிக்க வேண்டாம் என்று தகப்பனும் மகனும் நிறுத்த முயற்சி செய்தார்கள். இவர்களைத் தவிர, 8க்கு மேற்பட்ட கிராம மக்கள் வந்திருந்தார்கள் அவர்கள் யாரும் இதை ஏற்கவில்லை அதே நேரம் ஒரு அமைப்பின் பெயரை தரக்குறைவாக பேசியதால் பொது மக்கள் முன்னிலையில் மகன் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்திலும் ஒரே ஆட்கள்தான் சம்மந்தப்படுள்ளார்கள். ஆகவே இவர்கள் யாருக்காகவோ குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்வதுபோல் தோன்றுகின்றது. சிலர் பல நேரங்களில் இப்படியான செயல்களை செய்வதனால் மயிலிட்டி மக்கள் தாங்கள் மயிலிட்டி என்று சொல்ல தயங்குகின்றார்கள்.
இதை மயிலிட்டி மக்களின் பார்வைக்கு கொண்டுவதற்கான காரணம்  சம்மந்தப்பட்டவர்களுக்கு மயிலிட்டி பற்றிய கவலை இல்லை, அவர்கள் நிரந்தரமாக மயிலிட்டியில் வாழ்ந்ததில்லை, வெளிநாடுகளிலேயே வாழ்கின்றவர்கள் ஆகவே மக்கள் இவர்களை இனம் கண்டு மயிலிட்டியின் பெயரை காப்பாற்றவேண்டும் என்பதற்காக. நன்றி
வலி வடக்கு மீள் குடியேற்ற  கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

மணிவிழா காணும் செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்
நன்றி

___________________________________________________________________________

மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம


தாயகத்தில் யாழ் மாவட்டத்தில் 117 கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன இச் சங்கங்களின் அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கி சிறப்பாக செயற்பட்டமைக்காக மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் 2வது இடத்தை பெற்றுள்ளது. இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் வேளையிலும் 2வது இடத்தை பெற்றது முதல் இடமேயாகும்.
தாயகத்தில் மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் இரண்டாவது இடத்தை பெற்றமைக்காகவும், மயலிட்டி டொட் கொம் அறக்கட்டளையின் அகரம் நிகழ்வின்போது உங்கள் நிகழ்வாக முன்நின்று நடத்தி முடித்தமைக்காகவும் அனைத்து உலக மயிலிட்டி மகள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
நன்றி
பொறுப்பாளர்கள்



___________________________________________________________________________

தாயகத்தில் எம் உறவுகளான மீழ் குடியேற்ற குழுவால் மயிலிட்டி ஆலயங்களுக்காக பாடல்கள் CD வடிவில் வெளியிடவுள்ளார்கள். அதற்கான பண உதவியை வெளிநாடுகளில் வாழும் மயிலிட்டி மக்களிடம் வேண்டி நிற்கின்றார்கள். மயிலிட்டி டொட் கொம்மில் மக்கள் பார்வைக்காக போடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளோம். மேலதிக விபரங்கழுக்கு மீழ் குடியேற்ற குழுவுடன் தொடர்பு கொள்ளவும். எங்களுடன் தொடர்பு கொண்டாலும் அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தித்தருவோம்.
நன்றி


___________________________________________________________________________

மீழ் குடியேற்றத்திற்கான உண்ணாவிரதம்

கடந்த வாரம் வலி வடக்கு மக்கள் தெல்லிப்பளையில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் முன்பாக 24 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் தங்களை மீள குடி அமர்த்துமாறு வலியுறித்தி அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
நன்றி

___________________________________________________________________________

நீதி மன்றத்தில் வழக்கு

வலி வடக்கு மக்கள் தங்களை மீழ குடியமர்த்தும்படி 5 ஆயிரம் நில உரிமைப்பத்திரம் (காணி உறிதி) உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்காக பதிவு செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
நன்றி

___________________________________________________________________________

வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்திற்கான உண்ணாவிரதப்போராட்டத்தையிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பினரால் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது அதிலிருந்து ஒரு பகுதி.
நன்றி


___________________________________________________________________________


மீள் குடியேற்றத்திற்கான நடவிக்கை எடுக்கவேண்டும் என வலியுறித்தி  உண்ணாவிரதப்போராட்டம் 15-02-2013 அன்று துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது. பல அரசியல் கட்சிகள் கலந்துகொண்டிருந்தன குறிப்பாக எதிர் கட்சித்தலைவர் றணில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி

___________________________________________________________________________

வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்திற்கான உண்ணாவிரதப்போராட்டத்தையிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பினரால் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது அதிலிருந்து ஒரு பகுதி.
நன்றி

___________________________________________________________________________

உண்ணா விரதப் போராட்டம்

இந்த உண்ணா விரதப் போராட்டத்தை வலி வடக்கு பிரதேச சபை பொறுப்பாளர்
திரு தவிசாளர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் உண்ணா விரதப்போராட்டத்திற்கு மயிலிட்டி மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன் பெருமளவான மயிலிட்டி மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என தாயகத்து பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
நன்றி

___________________________________________________________________________

பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள பொதுமக்களின் 1202 வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.!

வடபகுதியில் உள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள பொதுமக்களின் 1202 வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. நேற்று (23) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது, சிறீலங்கா அரசின் பிரதம அதிகாரியான தினேஸ் குணவர்த்தனா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பொதுமக்களின் வீடுகளை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருகின்றனர். 1129 வீடுகளை இராணுவத்தினரும், 35 வீடுகளை கடற்படையினரும், 32 வீடுகளை வான்படையினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீடுகள் அனைத்தும் பெருமளவான நிலங்களுடன் பயன்பாட்டில் உள்ளதுடன், இரண்டு அரிசி ஆலைகளும் படையினரின் வசம் உள்ளது என தெரிவித்துள்ளார்
___________________________________________________________________________

வளம் நிறைந்த மண்ணை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்! நீதிமன்றிடம் சரணடைந்த யாழ். மயிலிட்டி மக்கள்

29.07.2012
கடல் வளமும் மண் வளமும் நிரம்பிய எங்கள் மண்ணை நாங்கள் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
எம்மை மீளக்குடியமர்த்துமாறு பலரிடம் மனுக்கள் கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை.
எனவே எங்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இதற்கு வலி.வடக்கு பிரதேச சபையும் எமக்கு உதவி வழங்க வேண்டும் என மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழும் மக்களின் மீளக்குடியமர்வினை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி உறுதிமொழி மக்களால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது.
மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த உங்களை சொந்த இடத்தில் குடியமர்த்தாது வலி.கிழக்கு பிரதேசத்தில் உள்ள “அக்கரை’ என்னும் இடத்தில் குடியமர்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் உங்கள் அபிப்பிராயங்கள் எமக்குத் தேவையாக உள்ளது என மக்களிடம் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் தமது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் மயிலிட்டி பிரதேசமானது மண்வளமும், கடல்வளமும், கைத்தொழில் வளமும் கொண்ட பிரதேசமாக இருந்தது.
சொந்தத் தொழில் செய்தே நாங்கள் வருமானம் ஈட்டினோம். நாங்கள் யாரிடமும் கையேந்தும் தேவை எழவில்லை.
ஆனால் தற்போது நாங்கள் படுகின்ற துன்பங்கள் ஏராளம். இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வருகின்ற நாங்கள் வீடுகள் மாறிமாறி தொடர்ந்தும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
வீட்டு உரிமையாளர்கள் எங்களை வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் நாம் நிர்கதியான நிலையில் உள்ளோம்.
கடற்றொழில் தவிர மாற்றுத் தொழில் தெரியாத நிலையில் வேறு எவ்விடத்திலும் தொழில் செய்ய முடியாத நெருக்கடிக்குள் நாம் வசித்து வருகின்றோம்.
இலங்கையின் இரண்டாவது பெரிய மீன்பிடித்துறைமுகமாக மயிலிட்டித் துறைமுகம் இருந்தது.
மயிலிட்டித் துறையில் கடற்றொழில் செய்பவர்களைத் தவிர அந்தத் தொழிலை அண் டித் தொழில் செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுடை நலன்புரி முகாமில் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
நாம் இங்கிருந்தும் இடம்பெயர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.
மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் வைத்தியசாலை மிகப்பெரிய வைத்தியசாலையாகும்.
இந்தப் பிரதேசமே வைத்தியசாலைக்கு ஏற்ற காலநிலையினைக் கொண்டதாகும்.
வளம் நிறைந்த இந்தப் பூமியினை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவில்லை.
மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊறணி பிரதேச இடம்பெயர் மக்கள் சார்பில் சமாசம் ஒன்று உள்ளது.
இதன் சார்பில் எம்மை மீளக்குடியமர்த்துமாறு மனுக்களை நாம் அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.
ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை. எனவே எம்மை மீளக்குடியமர்த்துமாறு இடம்பெயர் மக்கள் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குரிய வழியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்தார்.
இதற்கமைவாக நீதிமன்ற நடவடிக்கைக்குரிய குழு ஒன்று நேற்று தேர்வு செய்யப்பட்டது.
நன்றி திரு க.நிதி அண்ணா
மல்லாகம் பிரதேச சபையில் கூட்டமைப்பு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழக்கு தாக்கல் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டு அதற்காக மயிலிட்டி பகுதியை சேர்ந்த 15 பேர் காணி உறுதிகளையும் (பிரதி) கொடுத்துள்ளதாக அறிகின்றோம். இந்த வழக்கும் மயிலிட்டி மக்களின் ஒரு முயற்சிதான். இதனை அடுத்து. மயிலிட்டி மீழ் குடியேற்றக்குழு அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி பொதுக்கூட்டமும் ஊர்வலமும் நடத்துவதிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றார்கள் இது சம்பந்தமான முழு விபரங்களையும் பிறகு அறியத்தருகின்றோம்
நன்றி
___________________________________________________________________________

மயிலிட்டி அகதி முகாம்களில் இருக்கும் மக்களை வெளியேறும்படி நிர்ப்பந்தம்!

இருபத்திரண்டு ஆண்டுகளாக தங்கள் சொந்த இடங்களை இழந்து வாழும் மக்களை அகதிமுகாம்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர் வலிகாமம் வடக்கு மயிலிட்டி மக்கள்.

வலிகாமம் வடக்கு மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சபாபதிப் பிள்ளை அகதி முகாம், விநாயகர் அகதி முகாம், நீதவான் அகதி முகாம் ஆகியயவற்றிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பயணம் ஒன்றை மேற்கொண்ட போது, தமது நிலையினை அம்மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலு அவர்கள் கூறுகையில், தமக்கான நிவாரணத்தை நிறுத்தியுள்ளதுடன் தம்மை அகதிகளாக கணக்கெடுக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும், அத்துடன் சகல கொடுப்பனவுகளும், குடி நீரும், அகதி முகாமிற்கான குப்பை அள்ளுதல் முதலிய சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதனால் மக்கள் அந்த முகாங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாம் காலம் காலமாக வாழ்ந்த வலி. வடக்கு மண்ணை கேட்டு போராடுவதன் காரணமாகவே இவ்வாறு தம்மை அகதிமுகாம்களிலிருந்து வெளியேற நிர்ப்பந்திப்பதாக தெரிவித்த மக்கள் இதன்மூலம் தமது சொந்த இடத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர என்றும் தெரிவித்தனர்.

சபாபதிப்பிள்ளை முகாமில் 370 குடும்பங்களைச் சேர்ந்த 6000 பேர் வசித்து வருகின்றனர். குப்பைகள் நிரம்பி பிரதேச சபையினால் அள்ளப்பட்டு துப்பரவு செய்யாமையால் அகதி முகாமில் நோய் தொற்றும் அபாயம் உள்ளதாகவும் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த முகாம்களில் கூடுதலாக வசிப்பவர்கள் காலாங்காடு, முலவை, குளத்தடி அம்மன் கோவிலடியில் இருந்தவர்கள், இவர்கள் எமது கடல் தொழிலை நம்பி வாழ்ந்தவர்கள். நிவாரணங்கள் நிறுத்தப்பட்டு முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டால் மிகவும் கஸ்ரத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால் வெளிநாடுகளில் வாழும் நாங்கள்தான் அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக மயிலிட்டி மக்கள் உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்பிவையுங்கள்.

___________________________________________________________________________

வலிகாமம் வடக்கு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துமாறு யாழ். அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு



வலிகாமம் வடக்கு, காங்கேசன் துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு போன்ற பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவினர், யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளனர்.

22 வருடங்களுக்கு மேலாக சொந்த ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து, பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தற்போது நாட்டில் போர் முடிந்து மூன்று வருடங்கள் நெருங்கிக் கொண்டிக்கும் அந்த நேரத்தில், எமது பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இதனால் எமது மக்கள், தனியார் காணிகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருவதாக, வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் குணபால சிங்கம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக, ஜனாதிபதியின் கவனத்திற்கும் பாதுகாப்பு அமைச்சிற்கும் கொண்டு வருவதாகவும், வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரச அதிபர் இமெல்டா குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

___________________________________________________________________________

யாழ். தெல்லிப்பழையில் நடைபெற்ற அமைதி பேரணியில் பங்குபற்றிய மக்கள் மீது படையினர் தாக்குதல்!

வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ். தெல்லிப்பழையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

மக்கள் மீது கழிவு ஒயிலும் ஊத்தப்பட்டுள்ளது.

வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பு, வலிகாமம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை என்பவற்றுக்கு எதிராக தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதிப்போராட்டம் இன்று காலை நடைபெற்றது.

வலிகாமம் வடக்கு மக்களின் வாழ்வுரிமையினை முன்னிலைப்படுத்தி இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் முன்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்குப் பொலிஸார் கடும் எதிர்ப்பும், தடையும் விதித்திருந்த நிலையிலும் போராட்டம் வெற்றிகரமானதாக நிறைவடைந்திருக்கின்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி என்பனவும் கலந்துகொண்டிருந்தன.

காலை 10மணயளவில் துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான போராட்டம், பிரதான வீதியை அடைந்தபோது  பெருந்தொகையான பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். கலகம் அடக்கும் பொலிஸார் பெருமளவுக்கு ஆயுதபாணிகளாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். குண்டாந்தடிகளும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தின் இறுதியில் அருகேயுள்ள உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு மகஜர் சமர்ப்பிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற போதே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இதனைடுத்து பாராளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான, செ.கஜேந்திரன், எம்,கே.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பொலிஸாருடன் கடுமையாக வாதாடினர். எனினும் அதற்கு உடன்படாத பொலிஸார், வீதியின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி அடாவடி புரிந்தனர்.

இந்நிலையில் மக்கள் அப்படியே வீதியில் அமர்ந்திருக்க, மாவை சேனாதிராசா, கஜேந்திரன், சிவாஜிலிங்கம், மற்றும் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 5பேர் சென்று பிரதேச செயலகத்தில் மக்களின் மகஜரை கையளித்தனர். இதன் பின்னர் மக்களுடன் பேசிவிட்டு, பின்னர் பொலிஸாரின் செயற்பாட்டிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஊர்வலமாகச் சென்று மகஜர் சமர்ப்பிப்பதை பொலிஸார் தடுக்க முடியாது என மாவை கடுமையாக வாதிட்டபோது சீற்றமடைந்த பொலிஸார் கடுமையான வார்த்தைகளால் மாவையை திட்டித் தீர்த்ததாக அருகில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் குழுக்குழுவாகச் சென்று மகஜர் சமர்ப்பிக்க பொலிஸார் இறுதியில் அனுமதி வழங்கினார்கள்.

அதன் பின்னர் பொதுமக்கள் பஸ்களில் திரும்பிச் சென்ற போதே மோட்டார் சைக்கிளில் ஆயுத தாரிகளாக வந்த படையினர் பஸ்களை மறித்து பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியதுடன், அவர்கள் மீது பழைய ஒயிலை ஊற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் தொடர்கின்றது.




இரண்டாம் இணைப்பு

சொந்த மண்ணில் வாழ வழிகேட்டு போராடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் மீது புன்னாலைக் கட்டுவன் பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்களும், காட்டுமிராண்டிகளும் இணைந்து தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வழிமறித்த படைப் புலனாய்வாளர்கள், பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர்.

எனினும் சாரதி பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் பயணித்திருந்த நிலையில், பேருந்தின் மீது கழிவு ஓயிலை ஊற்றியுள்ளதுடன், இனிமேல் போராட்டம் என்று எதற்கும் வந்தால் இதைவிடவும் மோசமாக நடக்கும் என எச்சரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை அவர்கள் ஊற்றிய ஓயிலினால், பேருந்திலிருந்து பெண்கள், முதியவர்கள் உட்பட அனைவரும் ஓயிலில் நனைந்துள்ளதுடன், அவர்களது ஆடைகளும் முற்றாக கறைப்பட்டுக் கொண்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வந்திருந்தார்.

அவர்களிடம் மக்கள் நடந்து சம்பவத்தை தெரிவித்ததுடன், தமக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து மக்களை அழைத்துக் கொண்டு பருத்தித்துறை வரை சென்று பாதுகாப்பாக விட்டுவிட்டு அவர் திரும்பியுள்ளார்.

இதேவேளை இந்தச் சம்பவத்தினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.