Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


இவர் திரு இரத்தினராஜா அவர்களின் பேத்தி. 22-07-2014

_____________________________________________________________________________

மயிலையின் மைந்தர்கள் இருவருக்கு கலாபூசணம் விருது


15-12-2013 அன்று இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்
29 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூசணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நடைபெற்றது ,இவ் விழாவில் மயிலையின் மைந்தர்கள் இருவர் கலாபூசணம் விருதினை பெற்று எமது ஊரிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
சிற்பக்கலை துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக
திரு .செல்லப்பா சண்முகநாதன் அவர்கட்கும் ,நாடகத் துறையில் நீண்ட கால சேவை ஆற்றியமைக்காக திரு .வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை அவர்கட்கும் இவ் விருது கிடைக்க பெற்று இருக்கின்றது .இவ் இரு கலைஞர்களையும் மயிலிட்டி மக்கள் அனைவரும் உளமார வாழ்த்துகின்றோம்.
நன்றி அன்ரன் ஞானப்பிரகாசம் 17-12-2013

_____________________________________________________________________________


இந்தியா டெல்லியில் National Racing Championship 2013 MMSC FMSCI in
போட்டியில் செல்வன் மதன் சற்குணநாதன் கலந்துகொண்டு முதலாவது இடத்தையும், இரண்டாது இடத்தையும் தனதாக்கிக்கொண்டார்.

_____________________________________________________________________________


இந்தியா சென்னையில் Yamaha MMSC One Make Championship 2013 போட்டியில் கலந்துகொண்டபோது செல்வன் மதன் சற்குணநாதன்

_____________________________________________________________________________



இந்தியா சென்னையில் MRF challenge போட்டியில் 09-02-2014 அன்று செல்வன் மதன் சற்குணநாதன் பங்குற்றி 2 வது, மற்றும் 3வது இடத்தை பெற்றார்.

_____________________________________________________________________________

மயிலிட்டியின் மகள்  நர்வினிடேரியின் படைப்புகள்

மயிலிட்டியின் மகள்  நர்வினிடேரி ரவிசங்கர் அவர்கள் மேலும் பல படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றார் இவைகளை பார்க்கும்போது மயிலிட்டி பெண் என்பதனால் எங்களுக்கும் பெருமையாக இருக்கின்றது. அவற்றை கீழே தருகின்றோம். அவரின் படைப்புக்களில் பாடியிருக்கின்றார், பாடலை எழுதியிருக்கின்றார், கவிதை எழுதியிருக்கின்றார், இயக்கியிருக்கின்றார், நடித்திருக்கின்றார், மீண்டும் அனைத்து உலக  மயிலிட்டி மக்கள் சார்பாக நர்வினிடேரியை வாழ்த்துகின்றோம். நன்றி 24-01-2014



Nee Ennai Adutthu Irukkayil - by Narvinidery & Vashanth
15/02/2012
Poem by Narvinidery,
Cast: Vashanth & Narvinidery,

WHY THIS KOLAVERI DI - ROCK & ROLL FEMALE VERSION -
05/12/2011
Vocals by: Narvinidery & Archana
Lyrics: Narvinidery ,Thyalan
Direction: Narvinidery

Isai Payanam feat Archana B Darious
31/03/2012
Directed:Narviniddery

Tamil Rap - MC SAI - Kanni Pennea [Official Video]
01/04/2012
Artist : MC SAI Ft Archana & Narvinidery

Thanni Thotti Dinesh k (feat. Krishan Maheson)
31/01/2013
Singer: Aaryan Dinesh K, Narvini Dery, Archana Sellathurai

Vettri Chinnangal - Narvinidery feat. Vashanth Sellathurai
09/01/2013
Poem by Narvinidery

Idhayame Album
14/09/2013
Lyric : Narvinidery 

வாழ்த்துக்கள், கருத்துக்களுக்கு / COMMENTS

_____________________________________________________________________________

மயிலிட்டி நர்வினிடேரி கதாநாயகியாக

டென்மார்க்கிலிருந்து நர்வினிடேரி ரவிசங்கர் அவர்கள் முதன் முதலாக
" உயிர்வரை இனித்தாய் ". எனும் தமிழ் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகின்றார். இந்த திரைப்படம் அனைத்தும் முடிந்து திரையிடப்படுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றது.. இத் திரைப்படம் பல நாடுகளிலும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ரெயிரை B H அப்துல் கமீட் அவர்கள் வெளியிட்டுவைத்தார். இவரின் பாடல் ஒளிக்கீற்றில் போட்டியிட்டு பரிசு பெற்றதும் நீங்கள் அறிந்தது.வளர்ந்து வரும் இந்த கலைஞருக்கு மயிலிட்டி மக்கள் உங்கள் வாழ்த்துக்களை கூறி இவரை மேலும் உற்சாகப்படுத்துங்கள். நன்றி 24-01-2014






வாழ்த்துக்கள், கருத்துக்களுக்கு / COMMENTS

_____________________________________________________________________________

மயிலிட்டி பெண் நர்வினிடேரி திரைப்படத் துறையில் சாதனைகள்

12-01-2014 அன்று பிரான்ஸ் பரீசில் அனைத்து நாடுகளிலிருந்தும் ஒளிக்கீற்றில் போட்டியிட்ட எம்மவர்களின் படைப்புக்களில் எமது மயிலிட்டியின் வாரிசு நர்வினிடேரி ரவிசங்கர் (மயிலிட்டி வசீகரத்தின் மகளான ஜெயன்சாலியின் மகள்) அவர்கள் எனக்கு பிடித்த பொய்யே என்ற பாடலுக்காக ஈழத்தின் முதல் பெண் இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதினையும், பாடலுக்கான மூன்றாவது விருதுமாக இரண்டு விருதுகளை தமதாக்கி மயிலிட்டி மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துக்கொண்டார். விழாவுக்கு நர்வினிடேரி செல்லாத காரணத்தால் பாடலின் தயாரிப்பாளர் பெற்றுக்கொள்கிறார்.இந்த பாடலை எழுதியவரும் இவரே இவர் இந்த துறைகளில் மேலும் பல வெற்றிகளை பெறவேண்டும் என்று அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பாபக மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை வாழ்த்துகின்றது.
T.T.N குழுவினரால் 2004ம் ஆண்டு முதன் முதலாக ஒளிக்கீற்று 4 பாடல்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கனடாவின் T.V.I யினரால் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மேலும் வளர்ச்சி அடைந்து. தற்போது முதன் முறையாக 12-01-2014 அன்று பிரான்ஸில் திரையிசை பாடல் மேடை நிகழ்ச்சியாக அனைத்து நாடுகளிலிருந்தும் பல பாடல்கள் வந்து போட்டியில் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது.  நர்வினிடேரி ரவிசங்கர் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ளுங்கள். நன்றி 18-01-2014

வாழ்த்துக்கள், கருத்துக்களுக்கு / COMMENTS

_____________________________________________________________________________

உலக சாதனையாளர்கள் வரிசையில் மயிலிட்டி மாணவி சிவேன் ஞானகுலேந்திரன்


பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் மயிலிட்டியை சேர்ந்த தமிழ் மாணவி பெயர் சிவேன் ஞானகுலேந்திரன் . இவர் நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவர் விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 09-01-2014


_____________________________________________________________________________

அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்


மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன்  காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள்.பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.
இவைகள்போல் மேலும் பல முயற்சிகள் செய்து வெற்றி அடைய அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக மயிலிட்டி டொட் கொம்/ மயிலிட்டி டொட் கொம் அறக்கட்டளை வாழ்த்துகின்றது.
நன்றி 09-01-2014
நன்றி திரு கருணாநிதி, திரு அன்ரன்

_____________________________________________________________________________

சிறந்த உணவகம்

பிரித்தானியாவில் LEICESTER MERCURY பத்திரிகை  LEICESTER இல் உள்ள அனைத்து உணவகங்களுக்கிடையில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை 05-2013 நடத்தியிருந்தது அவற்றில் மூன்று உணவகங்கள் தெரிவு செய்யப்பட்டது அதில் ஒன்று மயிலிட்டி மகன் சுதா செந்தூருடைய சாந்தி உணவகம் (SANTHI RESTAURANT). சிறந்த உணவுகளுக்கான போட்டியில் சாந்தி உணவகம் தெரிவு செய்யப்பட்டமைக்காக அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக நாமும் சுதா தியாகராஜா குடும்பத்தினரை வாழ்த்துகின்றோம்.

கருத்துக்களுக்கு/ COMMENTS

_____________________________________________________________________________

மயிலிட்டி மைந்தன் ரூபனின் உலக சாதனை!!!

உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில் தொடர்ந்து மூன்று முறை
சிறந்த விளையாட்டு வீரனாக திரு ரூபன் இரட்ணராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். பிரித்தானியாவில் முதலாவது (TSSA) 05-05-2013 அன்று, இரண்டாவது (TCC) 26-05-2013 அன்று, தனது மூன்றாவது வெற்றிக் கிண்ணத்தை 16-06-2013 அன்று (TRO) பெற்று உலகத்தமிழர் உதைப்பந்தாட்ட வரலாற்றில் ரூபனால் நிகழ்த்தப்பட்ட முதல் உலக சாதனையாகும்.  
திரு ரூபன் இரட்ணராஜா அவர்களை எனது ஊரவன், எனது நண்பன், எனது உறவினர் என்று நாங்கள் அழைக்கும்படி மிகவும் தலை சிறந்த உதைப்பந்தாட்ட வீரன் என்று நிரூபித்துள்ளார். தொடர்ந்து பல வெற்றிகளை பெறவேண்டும் என்று அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

* HE IS THE GREATEST FOOTBALL PLAYER FROM MYLIDDY OF ALL TIME *

ரூபன் அவர்களுக்கு நேரடியாகவும் மயிலிட்டி டொட் கொம் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் ரூபன் அவர்கள் தனது நன்றிகளை தெரிவிக்கின்றார்.

கருத்துக்களுக்கு/ COMMENTS
 

_____________________________________________________________________________


தாய் மண்ணை விட்டு வந்து வெளிநாட்டில் முதன் முதலாக (THE VERY FIRST TIME IN FOREIGN SOIL ) பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் (T R O ) ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2002ம் ஆண்டு வைகாசி மாதம் கப்டன் ரூபனின் அணித்தலைமையில் மயிலிட்டி கண்ணகி விளையாட்டக்கழகம் (CHAMPIONS) முதலாவது இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டது. அணித்தலைவர் ரூபனுடன் சக விளையாட்டு வீரர்கள், குறிப்பாக மயிலிட்டி மக்கள் தங்களது முதலாவது வெளிநாட்டு வெற்றிக் கிண்ணத்தை கட்டித்தழுவிக் கொண்டாடுவதை புகைப்படங்களில் காணலாம்.
குறிப்பிட்டு சொல்ல 2002இல் இன்னுமொன்று  நிகழ்ந்தது T S S A யினரால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் முதலாவது இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தையும் ரூபனின் அணித்தலைமையில் அவரது தாயார் மற்றும் மாமன்மார் கல்வி கற்ற காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது


புலம் பெயர்ந்து வாழ்ந்த போதிலும் இல்லறத்தோடு சேர்ந்த இயந்திர வாழ்க்கைக்குள்ளும் 2002முதல் இன்றுவரை உதைப்பந்தாட்டத்தில் மயிலிட்டிக்கும் எங்களுக்கும் பெருமை தேடித் தந்துகொண்டிருக்கும் திரு ரூபன் இரத்தினராஜா அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தவேண்டியது மயிலிட்டி மக்களாகிய எங்கள் ஒவ்வொருத்தருடைய கடமையாகும். உதைப்பந்தாட்ட வீரனை வாழ்த்த விரும்புவோர் நேரடியாகவோ அல்லது கருத்து தெரிவித்தல் பக்கத்திலும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
இந்த வரலாறு நிறைந்த விபரங்களை தந்து உதவியதற்காக
திரு ரூபன் இரத்தினராஜா அவர்களுக்கு அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
உங்கள் கருத்துக்களுக்கு / COMMENTS


_____________________________________________________________________________

சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரித்தானியா கிளையினரால் நடாத்தப்படும் வருடாந்த உதைபந்தாட்ட 2013க்கான போட்டியில் இந்த வருடமும் எமது மயிலிட்டி வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி மிகவும் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளையும் பராட்டுக்களையும் தமதாக்கிக்கொண்டார்கள்.
மயிலிட்டிக்கும் எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக திரு ரூபன் இரட்ணராஜா அவர்களுக்கு  தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினரால் 2013ற்கான சிறந்த உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இன்னுமொரு பெருமை சேர்க்கும் விடயம் திரு ரூபன் இரட்ணராஜா அவர்களுக்கு இவ்வருடத்தில் இதுவரை மட்டும் இரண்டு உதைபந்தாட்ட போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினரால் நடாத்தப்பட சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் செல்வன் ஜெனோ அன்ரன்ஜோர்ஜ் மூன்று தங்கப் பதக்கங்களையும், செல்ன் சாரங்கன் கிரிதரன் இரண்டு பதக்கங்களையும்  தமதாக்கிக்கொண்டார்கள்.
விளையாட்டு வீரர்களை மயிலிட்டி மக்கள் சார்பாக பராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
நன்றி திரு அன்ரன்ஜோர்ஜ் அவர்களுக்கு



_____________________________________________________________________________

உதைபந்தாட்டம் TSSA 2013 இன் சிறந்த விளையாட்டு வீரர்
திரு ரூபன் இரட்ணராஜா


பிரித்தானியாவில் (TSSA) தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் உதைபந்தாட்ட போட்டி இவ்வருடம்
05-05-2013 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருட சிறந்த விளையாட்டு வீரராக மயிலிட்டியை சேர்ந்த திரு ரூபன் இரட்ணராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக்கிண்ணம் வழக்கப்பட்டது. இவருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

நன்றி திரு சுரேஸ் அவர்களுக்கு

_____________________________________________________________________________


செல்வன் மதன் அவர்கள் இந்தியாவில் 2012 இல் நடந்த மோட்டார் சயிக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மதன் மேலும் பல வெற்றிகள் பெறுவதற்கு மயிலிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

_____________________________________________________________________________

பிரித்தானியாவில் மயூரன் அவர்களின் திருமண விழாவில் திரு மு.சிவசெந்தில்நாதன் (குட்டிச்சிவா), மனைவி, மகன் அவர்கள் மணமக்களை வாழ்த்தி பாடியபோது எடுக்கப்பட்டது.

_____________________________________________________________________________




மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் SAIVA MISSION OF QUEBEC, 1611 ST-REGIS BLVD DOLLARD DES ORMEAUX, QUEBEC H9B 3H7 CANADA.

இந்த ஆலயத்தின் சித்திரத்தேரை  உருவாக்கியவர் மயிலிட்டி சரவணமுத்து ஜெயராஜ் அவர்கள் கனடாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் தேர், சப்பறம், மற்றும் சித்திர வேலைகள் அனைத்தும் திரு ஜெயராஜ் அவர்கள்தான் செய்தவர். செய்து கொணடிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றய நாடுகளிலும் இவரது சகோதார்கள், மற்றும் இவரது உறவினர்கள்தான் செய்கின்றார்கள்.
நன்றி

_____________________________________________________________________________

கௌதமனின் இயக்கத்தில் விளைவு


_____________________________________________________________________________



கெளதமனின் செருப்பு
மயிலிட்டியில் நாம் பிறந்ததிற்கு பெருமைப்படவேண்டும் சாதனையாளர்கள் வரிசையில் அடுத்து வருபவர் கருணாநிதி கெளதமன் இவர் எமக்கு பல வழிகளில் பெருமை சேர்த்துள்ளார். முதலாவதாக செருப்பு குறும் திரைப்படத்தை தயாரித்து பல பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இத்திரைப்படம் பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றதாக கேட்டு, பார்த்து அறிந்திருந்தோம், இதற்கு சொத்தக்காறர் மயிலிட்டியின் மகன் என்று அறியும்போது மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் உள்ளது. இவர் வேறு குறும்திரைப்படமும் தயாரித்துள்ளார். விரைவில் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார் அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளர், இவரின் அனைத்து ஆக்கங்களும் விபரமாக வரைவில் அறியத்தருவோம். இவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற்று பெற்றோருக்கும், மயிலிட்டிக்கும் மென்மேலும் பெருமைசேர்க்க வேண்டும் என்று மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது. நன்றி

_____________________________________________________________________________

கௌதமன் கருணாநிதி அவர்களின் குறும் திரைப்படங்கள் செருப்பு, விளைவு பற்றி

கௌதமன் மயிலிட்டி நாவலடி ஒழுங்கையில் வசித்த கருணாநிதி இறஞ்சனாதேவி தம்பதிகளின் மூத்த மகன். இவர் கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் நடேஸ்வரா கல்லூரியில் உயர்தரத்தையும் கற்றவர். இவர் 1994ம் ஆண்டு தந்தையாரின் மரணத்திற்குப்பிறகு புகைப்படப்பிடிப்பாளராக பருத்தித்துறையில் தொழிலை தொடங்கி முள்ளியவளை தண்ணீரூற்றில் நுண்கலைக்கல்லூரியில் வீடியோ பயிற்சியை முடித்து முதலாவது மாணவனாக சித்தியடைந்து வெளியேறினார். 2002 சமாதான ஒப்பந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மீள் குடியேறின இவர் யாழ் பல்கலைக்கழகம் லண்டன் SCRIPT NET நிறுவனத்தினர் உதவியுடன் நிகழ்த்திய திரை கதை எழுதும் பயிற்சி கற்றார். இலங்கை முழுவதுமாக நடத்தப்பட்ட பயிற்சி நெறிக்கு 150 பேர் பங்கு பற்றி 15 பேர் தெரிவானார்கள். இப்பயிற்சி நெறியில் தமிழ், முஸ்லீம, சிங்கள, பயிற்சியாளர்கள் இலங்கை முழுவதும் பங்கு பற்றி 5 பேர் மாத்திரம் தெரிவாகினர் அதில் கௌதமனும் ஒருவர். இறுதியாக வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களான COMMON WEALTH MEDIA DEVELOPMENT FUND நிதியில் செருப்பு குறும் படம் முல்லைத்தீவில் முதன் முதலாக சிங்கள கலைஞர்களையும் இணைத்து படமாக்கப்பட்டது. இப்படம் எல்லோர்

மனதிலும் மிகுந்த பாதிப்பையும் சிங்களவர் மத்தியில் தமிழர்களின் நிலையையும் அமைதியாக எடுத்துச்சொன்னது. இதன் பின்னர் இப்படம் இலங்கை முழுவதும் வெளியிடப்பட்டது மாத்திரமின்றி இங்கிலாந்துக்காறர் BRSCRIPTNET ஸ்தாபகரான JEAN MUSTER என்பவரால் பல நாடுகளிலும் திரையிடப்பட்டது. இதன் பின்னர் இவர் ---- காட்சி நாடகத்திற்கான திரைக்கதை எழுதும் பயிற்சி நெறியில் ஈடுபட்டார் அதனையும் வெற்றிகரமாக கற்று முடித்தார். வெளிநாட்டு நிறுவனத்தினரால் படமாக்கப்பட்ட தொலைக்காட்சித்தொடர் ஒன்றுக்கான 14 அங்கம் ( ஒரு அங்கம் 40 நிமிடம் ) கொண்ட தொடரை எழுதி முடித்தார். அதன் பின்னர் வளைவு என்ற குறும் படத்தை வெறும் நான்கு மணித்தியாலத்தில் படமாக்கிக்காட்டினார். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவினையும் இவரே மேற்கொண்டார். வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் வேலை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எமது ஈழப் பாடல்கள் சிலவற்றிற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது FRANCE இல் தங்கியுள்ளார். இவர் அடுத்த படத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் நடிக்க விரும்பும் மயிலிட்டி மக்களும்,மற்றும் இவருடன் இணைந்து செயல்பட விரும்புவோரும் இவருடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகட்கு கௌதமன் 0666299833

_____________________________________________________________________________


செல்வன் மதன் சற்குணநாதன் 03-10-11 அன்று இந்தியா சென்னையில் நடந்த மோட்டார் சயிக்கிள் போட்டியில் முதல் இடங்களை பெற்றார். இந்த வெற்களை தொடர்ந்து THAILAND போட்டியில் கலந்து கொள்ள தெரிவாகியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கும் போய் வெற்றிபெற்று அவரது பெற்றோருக்கும், மயிலிட்டிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அனைத்து உலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.

_____________________________________________________________________________


இந்தியா சென்னையில் SEP 5, 2011 அன்று நடத்த இரண்டு போட்டிகளிலும்
செல்வன் மதன் சற்குணநாதன் முதல் இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

_____________________________________________________________________________


AUGUST 16 அன்று நடைபெற்ற பந்தயத்தில் மதன் RACE 1 & 2 இல் முதலாவது இடத்தை பெற்று முன்நிலையில் வந்து கொண்டிருக்கின்றார்.

_____________________________________________________________________________

இந்தியா கோயம்புத்தூரில் 03-07-2011 அன்று நடந்த YZF-R15 ONE MAKE RACE  பந்தயத்தில் மீண்டும் செல்வன் மதன் சற்குணநாதன் முதலாவது இடத்தை பெற்று மயிலிட்டிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

_____________________________________________________________________________


செல்வன் மதன் சற்குணநாதனின் அடுத்த மைல் கல்  

இந்தியா சென்னையில் 3, 4, 5 - 06 – 2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற
FMSCI NATIONAL MOTORCYCLE CHAMPIONSHIP 2011 நாலு போட்டிகளிலும் இந்தியர்களுடன் போட்டியிட்டு போட்டியிட்ட நாலிலும் செல்வன் மதன் சற்குணநாதன் முதலாவது இடத்தைப்பெற்று மீண்டும் எமது மயிலிட்டிக்கு பெருமை சேர்த்துள்ளார், மதனின் அப்பா திரு சற்குணநாதன் இறைவனடி சேர்ந்து இரண்டு மாதம்கூட முடியவில்லை இந்த துயரமான நேரத்திலும் இவர் இந்த போட்டியில் பங்குபற்றி முதலிடத்தை பெற்றதிற்கு காரணம் அப்பாவின் ஆசிர்வாதம்தான். ஏனென்றால் மதன் அப்பாவின் செல்லக்குட்டி, அடுத்து JULY இல் நடக்கும் மற்றும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று பெற்றோருக்கும் எம்மண்ணுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று அனைத்துலக மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.

_____________________________________________________________________________



மயிலிட்டியில் பல வீரர்கள் வாழ்ந்த வரலாறு உண்டு அந்த வரிசையில் கனடாவில் இளம் வயதில் செல்வன் பாவலன் ஜெயறட்ணம்,
செல்வன் அனார்த்தன் ஜெயறட்ணம் இருவரும் BLACK BELT எடுத்து எமக்கு பெருமைசேர்த்துள்ளார்கள். இவர்கள் இந்த தரத்தை பெறுவதிற்கு
திருமதி உமை ஜெயறட்ணம் அவர்களின் கடின உழைப்பு அளப்பெரியது அவருக்கு மயிலிட்டி மக்கள் சார்பில் மயிலிட்டி டொட் கொம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

_____________________________________________________________________________

முதலாவது இடம் செல்வன் மதன் சற்குணநாதன்

மயிலிட்டி மண்ணிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர் வயதில்குறைந்தவர். பல வருடங்களாக பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களோடு போட்டி போட்டு முன்னணியில் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் எமது கிராமத்தவர் என்று நாம் சொல்லும் அளவுக்கு எமக்கு பெருமை சேர்த்துள்ளார், இவர் மேலும் பல வெற்றிகளைப்பெற்று பெற்றோருக்கும் மயிலிட்டிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.


SATKUNANATHAN MATHAN


1ST PRIZE - YAMAHA RACING RIDETECH CHALLENGE ON 20TH SEP 2009 IN COYAMUTHTHUR
2ND PRIZE .................................................. ON 13TH DEC 2009 IN CHENNAI

_____________________________________________________________________________


.
1.Lanka Lions Sports club 12th Senior & 11th Junior Athletic Championship 2010  - Gold Medal
2.National  Youth Sports Festival 2010 – Gold Medal
3.Sir John Tarbat Senior Championship – 2010 – Gold Medal
4.6th Red Cross National  Youth Athletic Championship – 2010 – Gold Medal
5.Junior National Championship 2010  - Gold Medal
6.All Island School Games – 2010 – Gold Medal
7.XXXVI (36th) National Sports Festival 2010 – Silver Medal
8.2008 அகில இலங்கை விளையாட்டுப்போட்டியில் தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.
9.2007 அகில இலங்கை விளையாட்டுப் போட்டியில் தட்டெறிதலில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.
 

செல்வன் ஹரிகரன் வடிவேஸ்வரன் தட்டெறிதலில் 2007 முதல் 2010 வரை பல தங்கப்பதக்கங்களைப் பெற்றுக்கொண்டார். அந்நாளில் திரு வடிவேஸ்வரன் அவர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர் என்பதும் யாவரும் அறிந்ததே, புலிக்குப்பிறந்தது பூனையாகுமா என்பதற்கு அமைய ஹரிகரன் அவரின் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் மேலும் பல சாதனைகளைப்பெற்று பெற்றோருக்கும் மயலிட்டிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று மயிலிட்டி டொட் கொம் வாழ்த்துகின்றது.