Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

கலைமகள் மகாவித்தியாலய அதிபர் கலாபூஷணம் பண்டிதர் சி.அப்புத்துரை, சைவப்புலவர் திருமதி இரத்தினம் அப்புத்துரை அவர்கள் தற்போது கனடா வந்து அவர்களின் மகள் சாந்தியுடன் வசித்து வருகின்றார்கள் கடந்த முறை கனடா வந்தபோது எமது ஒன்றுகூடலுக்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல் எமது மலர் வெளியீட்டுக்கு இருவரும் வாழ்த்து மடலும் எழுதித்தந்தார்கள், அதிபர் புத்தகம் வெளியீடு செய்தபோது நாம் மயிலிட்டி சார்பில் கலந்து சிறப்பித்திருந்தோம், கவலைக்குரிய விடயம் அவரது புத்தகவெளியீட்டுக்கு மயிலிட்டி மக்களுக்கு அறிவித்திருந்தோம். எல்லோருக்கும் தெரியும். ஒரு சிலரைத்தவிர வேறு யாரும் வரவில்லை. அன்று நாம் மிகவும் கவலைப்பட்டோம் காரணம் சாதாரணமாக இருந்த பேப்பள்ளிக்கூடத்தை. கலைமகள் மகாவித்தியாலயமாக பெரிய பெயர் எடுத்து யாழ்ப்பாணத்தில் பல பிரிவுகளில் வெற்றி அடையச்செய்தார் அவர் எமக்கு செய்த அளப்பெரிய சேவையை எம்மால் மறக்க முடியாது. கடந்தமுறை அதிபரை பார்த்த நாம் இம்முறை அதிபர் மிகவும் சுகயீனமுற்றுள்ளார் அவர் எழுதிய நூல் கூட இடையில் நின்றுவிட்டது. தற்போது திருமதி இரத்தினம் அப்புத்துரையும் மகள் சாந்தியும் அவரை ஒரு குழந்தையைப்போல் கவனித்துக்கொள்ளுகின்றார்கள். மயிலிட்டி மக்கள், பழைய மாணவர்கள் நீங்கள் அவர்களுக்கு நன்றியும் ஆறுதலும் கூடற விரும்பினால் இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 416 – 2826668.
அதிபர் எமக்கு ஆற்றிய சேவைக்காக மயிலிட்டி மக்கள் அதிபரை கௌரவிக்குமுகமாக ஏற்பாடு செய்துள்ளோம், அதிபரின் சுகயீனம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது, அதிபர் என்னும் பல ஆண்டுகள் சந்தோசமாக வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம்.

_________________________________________________________________________

_________________________________________________________________________

பண்டிதா் சி.அப்புத்துரை அவா்களின் புத்தக வெளியீட்டில் எமது ஒன்றியத்தின் சார்பில் கலந்து சிறப்பித்தனா்

_________________________________________________________________________

அதிபர் கனடாவில் வெளியிட்ட புத்தகம்

_________________________________________________________________________

அதிபர் தந்த வாழ்த்து மடல்