Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 


சுவாமி எதிரே நிற்காதீர்!

கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர். கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு. அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.


கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் 
-------------------------- -------------------------- -------------------------- ------
* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது 

* வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது 

* சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது 

* பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது 

* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது

* கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது

* கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது

* நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது

* தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து திரும்ப வேண்டும் 

* ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது

* மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது

* கோவிலில் உண்ண கூடாது, உறங்க கூடாது 

* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது 

* பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் மற்றவரை வணங்க கூடாது 

* கோவில் சொத்துக்களை எந்தவிதத்திலும் அபகரிக்க கூடாது 

* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது

* அஷ்டமி, நவமி, அம்மாவசை, பௌர்ணமி, மத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த நாட்களில் வில்வம் பறிக்க கூடாது. முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும் 

* தெய்வ வழிபடு ஈர உடையுடனும், ஓர் ஆடையுடனும் வழிபட கூடாது

* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது

* சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது

* கோவிலுக்கு சென்று வந்த உடனே கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பின்னர்தான் கால்களை கழுவ வேண்டும் 

* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் சிறந்ததாகும் 

* கோவிலில் நுழையும் போதும் வெளியே வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் வேண்டும் 

24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியனத்தையோ இடையுறு செய்ய கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே செல் போன் பேசுதல்) —

கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது…
-------------------------- -------------------------- ------
* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது. 
* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை. 
* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. 
* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும். 
* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும். 
* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.


முதன் முதலில் தோப்புக்கரணம் போட்டவர்

தோப்புக்கரணம் என்ற சொல் தோர்பிகரணம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது. தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்றும் கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர். ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பது இரண்டு. பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது. கை என்பதை சமஸ்கிருதத்தில் தோஸ் என்பர். தோஷா என்றால் ஒரு கை. தோர்ப்யாம் என்றால் இரண்டு கைகள். மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள். தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு. அப்படியானால், தோப்புக்கரணத்தை தோர்ப்யாம் கர்ணம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தோர்பி என்ற சொல்லுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் என்று பொருள். அப்படியானால், நான்கு கைகளையுடைய திருமால் தான் முதன்முதலில் தன் மருமகனான விநாயகருக்கு காதுகளை மாற்றிப்பிடித்து தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டி சிரிக்க வைத்தார்.
  குட்டு என்றால் என்ன?                                                                           
விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம் வெளிப்படும் போது குட்டு உடைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. வியாசர் பாரதக்கதையைச் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதினார். அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வியாசர், இடையிடையே சிக்கலான ஸ்லோகங்களைச் சொல்லி விநாயகரை யோசனையில் ஆழ்த்தினார். அந்த ஸ்லோகங்களுக்கு பாரத குட்டு என்று பெயர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அடுத்த ஸ்லோகங்களைச் சொல்ல தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் வியாசர். விநாயகனே! நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தக் குட்டு (ரகசியம்) உடையாமல், என் தன்மானத்தைக் காப்பாற்று, என்ற பொருளிலும் தலையில் குட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள்.
அரோகரா என்றால் பொருள் என்ன?
-------------------------- -----------------------
தமிழர்களின் முதற்கடவுளான முருகபெருமானை வணங்கும்பொழுது,முருகனுக்கு  அரோகரா என்கின்றோம்.இதன் பொருள் என்னவென்றால்..

அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுறுக்கம்.
இதற்கான பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'என்பதாகும்.

முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச் சொல்வது வழக்கமாயிருந்தது.
திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்து
கொண்டு வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ' என்று களைப்பைக் குறைப்பதற்காக
பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச்
சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ ஹரா'
என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 'அர ஹரோ ஹரா' என்றுச் சொல்வது
வழக்கமாயிற்று.

இன்னும் சொல்லப்போனால் அரோகரா என்பதை,அர+ஓ+ஹரா என பிரிக்கலாம்,அதாவது அரண்,ஹரண் இரண்டுமே சிவனின் பெயரை குறிப்பதாகும் இருந்தாலும அவர் புதல்வர் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள்,முருகனை வணக்கும்போது அரோகரா என்கின்றனர்.

காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள்
(முருகனடியார்கள்) 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றுச் சொல்லி வந்ததால்
இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன!

பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றுச் சொல்வது'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும்
துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக'
என்று உரிமையோடு முறையிடுவதாகும்.

முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் இனி

'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'
என்றே சொல்லுவோம்.


கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?
-------------------------- -------------------------
தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது.கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று.கோ
விலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால்,ஒரு திரை போடப்படுகின்றது.தீபத்தை காட்டும்பொழுது திரை விலக்கப்படுகிறது.இதன் தத்துவம் என்னவென்றால்,நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து.நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.

தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது,முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும்,இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும்,மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும்.

பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால் இறைவனின் முகம் தெளிவாக தெரிவதற்கு தீபம் காட்டபடுவதாக சிலரின் கருத்தாக இருக்கும்.எது எப்படி இருந்தாலும் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை தீபமாக காட்டுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கிருப்பது என்பதே உண்மை.தேங்காய்
-------------
தேங்காய் வழிபடச் செல்லும் பக்தனைக் குறிக்கும் . இதில் உள்ள மூன்று கண்கள் மும்மூலங்களான ஆணவம் மாயையைக் குறிக்கும் .தேங்காயின் பருப்பு ஆன்மாவையும் தேங்காயை உடைக்கும் கருவி 
ஆன்மாவின் விடுதலைக்கு தேவையான இறைவனின் திருவருளையும் குறிக்கும்.பழங்கள் பக்தனின் நல்வினை பலன்களை குறிக்கும்.இவற்றை படைத்து கற்பூரம் காட்டுவது.இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவம் வாய்ந்த ஆன்ம நிலையை குறிக்கிறது.

கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்ததும் அழுகலாக இருந்தால் சிலர் மனம் உடைந்து போய் விடுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் கேடு விளையுமோ என்று எண்ணுகிறார்கள் .இது தவறான கருத்து. தேங்காய் 
நல்லதாயினும் அழுகலாயினும் நமது வேண்டுகோளை இறைவன் ஏற்றுகொள்வார் .மரபுப்படி அழுகல் தேங்காயை இறைவன் முன் வைக்காமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள் அவ்வளவுதான்
Why do people leave shoes outside temples,

Since childhood this is taught to us one of the good habit which is purely scientific as all of us knows that is not to wear sandals inside the temple and in house and even for any religious ceremonies ...this is there in hindu temples, gurudwaras, mosque and other religious temples too as wearing shoes spread dust and many other microorganisms which might give rise to infections as many people visit temples and religious places and at homes there are kids who get infected very fast some old people as well as other members ..here it goes

Chappals or Shoes are generally made up of rubber or leather or sometimes even animal skin is used to make shoes. All these things are considered impure and at the same time as you know, shoes and chappals are used everywhere hence they tend to get all the impurities like dirt, germs etc., which spoil the pure environment of the temple and is the source of negative energy.

The place of Worship is the most sacred place and hence in order to keep this negative energy out of the temple, foot-wears are not allowed inside religious places and temples.

This concept extends to interactions between individuals. Touching another person with your shoe or foot may be considered an insult. If done accidently an apology should be made by touching one’s right hand to the spot on the individual that was offended and then lightly using the same hand to touch your own left eye and then the right. Also one should never point their foot at another person nor spread their feet before an altar.
Normally the foot are main doors for our body to transmit outside good and bad into us.

If we are cleaning our foots before entering to the house after outside work, (we are believing)many diseases are invited. Similarly our bare footed legs will inspire much with the sanctity of temples. Another thing it is one way respect to God.

In this same spirit shoes should be taken off when entering a temple. It represents slipping off of the material world when one enters a spiritual realm.

They should be removed without using one’s hands. If unavoidable hands should be washed before the individual touches anything else within the structure. Temples usually have a place to leave shoes and in certain cold weather ones wooden shoes may be provided. These will be exchanged for one’s own shoes upon leaving.

The practice of removing shoes is carried over to most Hindu homes. If it isn’t obvious where you can leave your shoes one should ask. It is considered improper to carry them from room to room.

Foot-wears are considered to be unholy and temples are holy places which are full of positive vibrations.Therefore, before we enter temples we should not only remove your shoes or slippers but also wash our feet so that we don't spoil the holiness of those places.For example, we would have walked with the shoes or slipper before entering the temple and unknowingly we would have stamped on some dirt and carry it to religious places is not ethical.

Importantly, traditionally our forefathers had followed the rule of entering the temples bare-footed. So, definitely there must be some special reasons.

VERY IMPORTANT:
Temples are the place that contains pure vibrations. In olden days temples are constructed in such a way to create vibration. They enter our body through our foots.

Hindus believe that God is the supreme of the Universe and we all are here only because of his blessings, we need to behave in a good manner inside the temples.Going to the temple with a clean body. Legs and hands shall be cleaned at entering the temple. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?
-------------------------- -------------------------- ----------------
இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு.

வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்றால் வெற்றிலை பாக்கு படைக்கவேண்டும். வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும்.

வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே 
கருதப்படுகிறது


சாம்பிராணி போடுவது ஏன்?;
-------------------------- ------------
சாம்பிராணி என்பது ஒரு மரப்பிசின் ஆகும்.அனைத்து மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் அனைத்துசடங்களிலும் மற்றும் வழிபாடுகளிலும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கின்றனர்.

சாம்பிராணி போடுவது , ஹோமங்கள் செய்வது போன்றவை நம் சுற்று சூழலில் உள்ள அசுத்தத்தை நீக்கி 
நமக்கு ஒரு நேர்மறையான(positive) சக்தி அளிப்பதற்கே. போபாலில் அக்னிஹோத்ரம் செய்த ஒரு குடும்பம் விஷவாயு தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்ததே இதற்கு சான்றாகும்.

தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் சாம்பிராணி தூபம் போடுவர்.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள்,மங்கல நாட்களான செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் மாலைவேளையில்,குளித்துவிட்ட ு தெய்வபடங்களுக்கு விளக்கேற்றி வைத்து,சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள்,தரித்திரம் அகலும்.லெஷ்மி கடாட்சம் 


பெருமாள் கோவிலுக்கு சென்றால் நமக்கு அளிக்கப்படும் துளசி தீர்த்தம் நிறைய பிரச்சனைகளை தீர்க்கும் என்று தெரியும் ....

ஆனால் கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளுக்கும் அதுவே பெருமருந்து என்பது எத்தனை பேருக்கு தெரியும்?....

மனிதனின் உடல் நல்ல முறையில் இயங்க தேவையான ஐநூறுக்கும் மேலான செயல்களை செய்யும் ஒரே உறுப்பு கல்லீரல் தான் ......கெட்டுப் போனாலோ அல்லது சிதைந்தாலோ ....மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டுமே......

அதிக புகை மற்றும் குடிபழக்கம் உள்ளவர்கள், இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி பழக்கமுள்ளவர்கள் இவர்களுக்கு தான் கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
இப்போதைய கால கட்டத்தில் பலர் நாகரீகம் என்ற பெயரில் அந்த வாய்ப்பை அவர்களே உருவாக்கி கொள்கிறார்கள் ....

துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல் கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும்.. பக்கவிளைவுகள் இல்லாமலும் போகும் ....

கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை வராமல் தடுக்க இனி புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை தவிர்த்து.... துளசி நீர் , முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் மண்ணீரல் காப்போம்...... :)

( துளசி சளிக்கும் ஒரு எதிரி... ஆக துளசி நம் நுரையீரலையும் பாதுகாக்கும் ஒரு பொக்கிஷம்.....துளசி பெருமை சொல்லிக் கொண்டே போகலாம் )

எந்த கிழமையில் எந்த மலர்களை இறைவனுக்கு அணிவித்தால் சிறப்பு:

எந்த கிழமையில் எந்த மலர்களை இறைவனுக்கு அணிவித்தால் சிறப்பு என்பதை அகத்திய முனிவர் அருளியதை தெரிந்துக் கொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் : தாமரை மலர் சமர்பித்து இறைவனை வணங்கினால், குடும்பத்தில் இருக்கும் மனசங்கடங்கள் நீங்கி, குடும்பத்துடன் சுபிக்ஷமாக இருப்பார்கள்.

திங்கள்கிழமைகளில் : முல்லை, மல்லிகை போன்ற மலர்களை கொண்டு இறைவனுக்குப் பூஜை செய்தால், விரோதங்கள் மறையும் மனசங்கடங்கள் நீங்கும்.

செவ்வாய் கிழமைகளில் : அரளி, கஸ்தூரி போன்ற சிகப்பு பூக்களை துர்கைக்கு அணிவித்தால் திருமண தடை விலகும். கணவன்- மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.

புதன்கிழமைகளில் : எல்லா மலர்களையும் சேர்த்து பூஜித்தால், நோய் நீங்கும். நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். பிள்ளைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

வியாழக் கிழமைகளில் : சாமந்தி போன்ற மஞ்சல் நிற மலர்களை கொண்டு அர்ச்சித்தால், திருமணதடை நீங்கும். தடைபடும் செயல்கள் எளிதாக நடக்கும். தொழில் ஏற்றம் பெறும். குழந்தை பாக்கியம் அமையும்.

வெள்ளிக் கிழமைகளில் : மல்லிகை மலர்களால் இறைவனை பூஜை செய்தால், வியாதிகள் நீங்கும். செல்வம் பெருகும். பிள்ளைகளுக்கு நன்மை உண்டாகும். 

சனிக்கிழமைகளில் : மனோரஞ்சிதம் மலரால் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால், மன தைரியம் ஏற்படும். விரோதிகள் அழிவார்கள். நல்ல சிந்தனை உண்டாகும்


சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் எதுக்காக..? இந்து மதம் அற்புதம்

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.


திருநீறு அணியும் காரணம்
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்
1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரக்தியைத் தரும்.
திருநீர்
---------
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும்தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும் :
-------------------------- -------------------------- ------------------------
திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும் ,சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது அவசியம். 

நம் முன்னோர்கள் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும், பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் .மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு , ஆனால் குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் .இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.

இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும் ,மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞானம் கூறுகிறது. அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .அதனால் காலையும் மாலையும் 
நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.

குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீர் அணிவது வழக்கமாக்க பட்டது .

அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். 

அணியும் முறை
-----------------------
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போதுதிருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

திருநீறு அணியும் இடங்கள்
-------------------------- ------------
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
1. தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்
-------------
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!


திருநீறு (விபூதி):-

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.


திருநீறு வகைகள்

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்

1.கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4.அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் காரணம்

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். 

மும்மலங்களையும்சாம்பலாக்கி  அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

இது தற்பொழுது உள்ள குறிப்பு.

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம்

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் 
செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவஎன்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

திருநீறு:-

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்.

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.

2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.

3. தீட்டுக் கழிக்கும்.

4. உடலைச் சுத்தம் செய்யும்.

5. வியாதிகளைப் போக்கும்.

6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.

7. முகத்திற்கு அழகைத் தரும்.

8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.

9. புத்திக் கூர்மையைத் தரும்.

10. ஞானத்தை உண்டாக்கும்.

11. பாவத்தைப் போக்கும்.

12. பரக்தியைத் தரும்.

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக.....

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.குங்குமம்..! 

மஞ்சளில் பல வகையுண்டு. விரலி மஞ்சள், சருகு மஞ்சள், பூச்சு மஞ்சள், கறி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நாட்டு மஞ்சள், சீமை மஞ்சள், குரங்கு மஞ்சள் என்பவை அவற்றுள் சில. மஞ்சள் நிறமுடையவை பெரும்பாலும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டாலும் சில மஞ்சள் சமாச்சாரங்களுக்குப் பயப்பட வேண்டித்தான் இருக்கிறது. மஞ்சள் காமாலை, மஞ்சள் கடுதாசி, மஞ்சள் பத்திரிக்கை முதலியவற்றைக் கூறினேன்.

மஞ்சள் பொடியில் அர்ச்சனை செய்வதும் உண்டு. ஹரித்ரா சூர்ணம் என்பதே மஞ்சள் பொடி. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவதை ஹரித்ரா குங்குமம் என்று கூறுகின்றோம். உண்மையிலேயே குங்குமம் என்பது ஆரம்பகாலத்தில் குங்குமப்பூவைக் குறித்தது. குங்குமப்பூ என்பது ஒரு தனிப் பொருள். இதைக் கடைகளில் வாங்கலாம். மெல்லிய இழைகளாக - குங்கும வர்ணத்தில் கிடைக்கு. மெல்லிய-ஆனால் நீண்ட தூரம் பரவும் நறுமணம் உடையது. இது ஒருவகைச் செடியின் மலரின் காயவைக்கப்பட்ட மகரந்தக் காம்புகள். காஷ்மீர், துருக்கி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 

"குங்குமப்பூவே! கொஞ்சும் புறாவே!" என்று பாடல் சிறப்புப் பெற்ற குங்குமப்பூ இதுதான்.

மிகவும் கிராக்கியான பொருள். ஆகவே அதிகக் கலப்படத்துக்கு ஆளாகிறது. தேங்காய்ப்பூவில் கலரைச் சேர்த்து குங்கும எஸென்ஸைச் சேர்த்து அதைக் குங்குமப்பூ என்று விற்பார்கள். 'எடைக்கு எடைத் தங்கம்' என்பார்கள். அது குங்குமப்பூவுக்குப் பொருந்தும். 

குங்குமப்பூவைப் பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பன்னீருடன் உரசுகல்லில் உரசி எடுப்பார்கள். இதுதான் குங்குமப்பூச்சு; அல்லது குங்குமக்குழம்பு. இதைத்தான் அம்பிகைக்குத் திலகமாக இட்டு, பூச்சாகவும் பூசுவது. பழங்காலத்தில் வசதி மிக்க அரச வர்க்கத்துப் பெண்கள், பணக்காரப் பெண்கள் முதலியோர் குங்குமப் பூச்சு, குழம்பு ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். 

குங்குமம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் 'ஹரித்ரா குங்குமம்' என்பது குண்டு மஞ்சள், எலுமிச்சைச் சாறு, சீனாக்காரம், படிக்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றிலிருந்து செய்யப்படும். வைணவர்கள் ஸ்ரீசூர்ணம் என்னும் பொடியை நாமமாக அணிந்து கொள்கிறார்கள்


தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது 

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.


நவக்கிரகங்களுக்கு ஏற்ற மலர்கள்;
-------------------------- --------------------
ஒவ்வொரு நவக்கிரகங்களுக்கும் பிடித்தமான மலர்கள் உள்ளன.எந்த கிரகத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ  அந்த கிரகத்திற்கு பரிகாரமாக அர்ச்சனை செய்யும்பொழுது,அந்த கிரகத்திற்கு உரிய மலரையும்,தானியத்தையும் சேர்த்து அர்ச்சனை செய்தால் அந்த கிரகத்தினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் முற்றிலும் விலகும்.

சூரியன் - செந்தாமரை.
சந்திரன் - வெண் அலரி.
செவ்வாய் - செண்பகம்.
புதன் - வெண் காந்தள்.
குரு - முல்லை.
சுக்கிரன் - வெள்ளைத் தாமரை.
சனி - கருங்குவளை.
ராகு - மந்தாரை.

இந்த மலர்கள் கிடைக்காத பட்சத்தில் வாசனமிகு மலர்களையும் பயன்படுத்தி நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

நவக்கிரக தானியங்கள்;
-------------------------- ------
ஒன்பது நவக்கிரகங்களுக்கு ஒவ்வொரு தானியம் உண்டு.

சூரியன் - கோதுமை.
சந்திரன் - பச்சரிசி.
செவ்வாய் - துவரை. 
புதன் - பச்சை பயிறு. 
குரு - கடலை. 
சுக்ரன் - மொச்சை கோட்டை. 
சனி - எள்ளு. 
ராகு - உளுந்து. 
கேது - கொள்ளு.

புதிதாக வீடுகட்ட துவங்குமுன் அந்த மனையில் இருக்கும் வாஸ்து குறைபாடுகள் நீங்க,மனையை சமன் படுத்தி நீர் தெளித்து நவதானியங்களை தூவ வேண்டும்.நவதானியங்கள் முளைத்தவுடன் பசு விட்டு மேய்த்தால் அந்த இடத்தில் உள்ள அனைத்துவிதமான வாஸ்து குறைகளும் நீங்கிவிடும்.

நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்;
-------------------------- -------------------------- ---
சூரிய பகவான் : 
பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது. 

சந்திர பகவான் :
சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது. சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது. (இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும். 

குரு பகவான் : 
விவாகத்திற்கும், குழந்தை பாக்கியத்திற்கும் குரு பலன் அவசியம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் திருக்கோவில் ஒன்றில் நெய்தீபம் ஏற்றுவதாலும், வியாழன் அன்று பெரியவர்கள், துறவிகள், சாதுக்களை வணங்கி ஆசி பெறுதலும், குரு தோஷ பரிகாரமாகும். 

ராகு பகவான் : 
தவறான காதலில் விழுந்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் பெண்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் அதில் ராகுவின் பங்குள்ளதை அறியலாம். இத்தகைய ஜாதகம் அமைந்த பெண்களுக்கு கூடிய வரையில் ராகுவின் ஆதிக்கம் வருவதற்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது. ஜாதகத்தில் புத்திரதோசம், சயன தோஷம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு பிரீதி செய்து கொள்வது அவசியமாகும். அருகில் உள்ள திருக்கோவில் ஒன்றில் கர்பகிரகத்தில் இடைவிடாது எரிந்து கொண்டுள்ள விளக்கில் முடிந்தபோதெல்லாம் நெய் சேர்த்து வருவது மிக எளிய பரிகாரமாகும்.

புதன் பகவான் : 
வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப்புலமை தருவது புதனே. புதன் தோஷத்தால் கல்வித்தடை ஏற்படும். புதன்கிழமை உபவாசமிருந்து கோவில் ஒன்றில் தீபம் ஏற்றுவது, புதன்கிழமையில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை, புத்தகம், உணவு வழங்குவது எளிய பரிகாரமாகும். 

சுக்கிர பகவான் :
"சுக்கிரன் என்ற கிரகம் இல்லாவிடில் உலகமே காவி உடுக்கும்'' வாழ்க்கை தரும் சுகங்களை அனுபவிப்பதற்கு, ரசிப்பு தன்மை - ரசிக்கும் மனோபாவம், கலையுள்ளம் வேண்டும். இதை அளிப்பவர் சுக்கிர பகவானே. சுக்கிரனின் தோஷத்தில் அகமிழந்து வேதனை அடைவோர் அரங்கனின்(ஸ்ரீரங்கம்)சந்நி தியில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமை நீராடி, உபவாசம் இருந்து, ஏழை சுமங்கலிப் பெண்ணிற்கு ஆடை, ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வது எளிய பரிகாரமாகும். 

கேது பகவான் :
கேது இல்லையேல் சொர்க்கம் காலியாகும். கேது சுபமாயிருந்தால் ஆன்மீகத்தில் நாட்டமும் உலக பந்தபாசங்களில் குறைந்த நாட்டமும் ஏற்படும். பாப விமோசனத்தை அளிப்பவர் கேது. பிறவிப் பிணியறுப்பவர் கேது. கேது தோஷம் ஏற்பட்டால் சர்ம ரோகம், பில்லி சூன்ய துன்பங்கள், ஒழுக்கமற்ற பெண் சேர்க்கை ஏற்படும். காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் கோவிலில் 100 கிராம் நல்லெண்ணை தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வரவும். 

சனி பகவான் :
ஜாதகத்தில் சனிபலம் பெற்றிருந்தால் நீண்ட ஆயுளும், குறைவிலா செல்வமும் பெறுவார்கள். கொடிய விபத்திலும் ஆயுளை பாதுகாக்கும் சக்தி கொண்டவர் சனி. செய்த தவறுக்கு அந்த செயலாலே அழிவு ஏற்படுத்துபவர் சனிபகவான். வீட்டில் சனிக்கிழமை விரதமிருந்து மாலை தீபம் ஏற்றுவது, எள் கலந்த சாதம், ஏழை எளியவர்க்கு உணவு கொடுப்பது எளிய சனி தோஷப் பரிகாரமாகும். 

அங்காரகன் :
உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும். மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து, ஏதாவது கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும்.முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
-------------------------- -------------------------- ---------
தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா? அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகத்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியா கக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். பழனி தவம் வந்த போது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். பிறகு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான்.

ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணான்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பன் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை `தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடினான்.

கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக்கண்ட அகத்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார்.

அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி, சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது.


சனி நீராடுவது ஏன்?
-------------------------- -
நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் சனி ஆகும்.சனி என்ற வார்த்தையை பெரும்பாலும் யாரும்விரும்ப மாட்டார்கள்.சனீஸ்வரன் ஏழரை சனி,அஷ்டம சனி என பல தொல்லைகள் கொடுத்தாலும்,மற்றவர்களை புரிந்து கொள்ளும் அறிவையும்,எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் நமக்கு கொடுப்பார்.

பொதுவாகவே சளி பிடித்தால் சனி பிடித்தது போல் இருக்கும் என்பர்.உடம்பில் சளி பிடிக்க காரணமாக இருக்கும் கிரகம் சனி ஆவார்.சனி ஒரு குளிர்ச்சியான கிரகம்.சனியின் தானியமான எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் நம் உடம்பில் உள்ள வெப்பத்தை சம நிலையில் வைத்துகொள்ள உதவுகிறது அதனால்தான் சனிக்கிரக நாளான,சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கச்சொல்கிறார்கள்.

மேலும் சனி நமது ஆயுளுக்கு காரகன் ஆவார்.அதனால் சனீஸ்வரனை வழிபட்டு,அவரின் வாகனமான காக்கைக்கு சோறு வைத்து வணங்கினால் நம் ஆயுளும்,வாழ்வும் வளம் பெறும். * ஸ்தல விருட்சங்களை இரவில் வலம் வருதல் கூடாது


கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வது ஏன்?
-------------------------- -------------------------- -----------
அங்கப்பிரதட்சணம் என்பது தரையில் படும்படி படுத்துகொண்டு தானும் சுற்றி(உருளுவது)கோவில் பிரகாரத்தையும் சுற்றுவது ஆகும்.கோவில் பிரகாரத்தை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்வது மிகவும் நலம் தரக்கூடிய விசயமாகும்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கமுமே ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் இயங்குகிறது.பூமி தானும் சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுகிறது.சந்திரன் அதன்படியே பூமியை வலம் வருகிறது.ஒவ்வொரு கோயிலின் கர்ப்பக்கிரகம் பிரபஞ்ச ரகசியத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்படுகிறது.

பொதுவாகவே கோயிலை சுற்றி நன்மை செய்யக்கூடிய கதிர்வீச்சுகள் இருக்கும் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க இறைவனை சரணடைந்து உருளுகின்றோம்.இந்த கதிர்களின் தாக்கத்தை நாம் பெறுவதற்க்காகத்தான்,சாமி தரிசனம் முடிந்ததும் கோயிலில் சிறிது நேரம் அமருகிறோம்.

மேலும் சன்னதியில் பல சித்தர்கள்,ரிஷிகள்,புண்ணிய ம் செய்தவர்கள் கால் தடம் பட்டியிருக்கும்.அவர்களின் பாதம் பட்ட பூமியில் வணங்கினால் நம்முடைய பாவங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும் 


கர்ப்பிணிகள் கோயில் கருவறையை வலம் வந்து வணங்கலாமா?


திடீர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கர்ப்பிணியின் மனத்தை பாதிக்கும், மனமானது குழந்தையிடமும் தன்னைக் குறித்தும் மாறி மாறிச் செயல்படும் தருணத்தில், குழந்தையின் மனத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. தேரோட்டத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள். அசைந்து ஆடிவரும் தேரைப் பார்க்கும்போது... விழுந்துவிடுமோ? சாயுமோ? என்பன போன்ற எண்ணங்கள் மனத்தில் தோன்றினால், பயம் மனத்தைப் பற்றிக்கொள்ளும். அல்லது, ஆச்சரியமான காட்சியில் அளவுக்கு அதிகமாக மனம் விரிவடையும்போது, விரும்பத்தகாத பாதிப்புக்கு இடமளித்துவிடும். அளவுக்கு மீறிய துயரத்தையும் அவள் மனம் சந்திக்கக்கூடாது. இந்தக் கண்ணோட்டத்திலேயே 8 மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் வெளி வட்டாரங்களில் நிகழும் உத்ஸவங்களைத் தவிர்ப்பது உண்டு. ஆறு மாதம் தாண்டிய கர்ப்பிணிகள் கோயிலுக்கு வந்து வலம் வருவதைத் தவிர்க்கலாம். அவளது சுகாதாரம், குழந்தையின் சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டும். நல்ல மன உறுதியும், அதிர்ச்சி, ஆச்சரியம், துயரம் ஆகியவற்றின் தாக்கத்தால் மாறுபடாத மனம் இருந்தாலும்கூட,


கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???(
ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.................


அரசும்,வேம்பும்..,
------------------------
அரசமரமும்,வேப்ப மரமும் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்து இருப்பதை நமது சாஸ்திரங்களும்,முன்னோர்களு ம் மிகவும் தெய்வீக சக்திவாய்ந்ததாக கூறியிருக்கிறார்கள்.பொதுவா க அரச மரத்தை சிவனின் வடிவமாகவும்,வேம்பை உமையவளின் வடிவமாக இந்து மதத்தில் வழிபடுவார்கள்.இந்து மதத்தில் மரங்களின் மகத்துவம் உணர்ந்தே, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தலவிருட்சம் என்று விருட்சங்களை தெய்வங்களின் உறைவிடங்களாக்கி வழிபடுகிறார்கள்.

அரச மரமும், வேப்ப மரமும் பின்னி பிணைந்த இடம் விநா யகருக்கு மிகவும் பிடித்த இருப்பிடமாகும். கணபதி வீற்றிருக்கும் அரச மரத்தை பெண்கள் சுற்றி வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது முன் னோர் வாக்கு.

இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.மேலும் மரங்களிலேயே அரச மரமும்,வேம்பும்தான் 24 மணி நேரமும் பிராண வாயுவை(ஆக்ஜிசன்)வெளியிடும்  தன்மையுள்ளவை.

மேலும் இந்த இருமரமும் இருக்கும் இடத்தில் ஒரு உயிரியல் மின்சக்தி இருக்கும்.இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் காற்று மனிதனின் நாளமில்லா சுரப்பிகளை தூண்டக்கூடியது.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப ஆனைமுகனை அலங்கரிக்க
அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அறுகம்புல் மாலை.

பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.

கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.

ரோகினி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.

மிருகசீரிஷம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.

திருவாதிரை - தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை.

புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.

பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.

உத்திரம் - திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.

ஹஸ்தம் - சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.

சித்திரை - வெள்ளி கவசம், அறுகம்புல் மாலை.

சுவாதி - தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.

விசாகம்- திருநீறு அலங்காரம்.

அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை, ரோஜா மாலை.

கேட்டை - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.

மூலம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.

பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.

உத்திராடம்- அறுகம்புல் மாலை.

திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல் மாலை.

அவிட்டம் - மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.

சதயம் - குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.

பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.

உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.

ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.

நம்முடைய முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு கருத்துகளிலும்,நடைமுறைகளில ும் மனிதனின் வாழ்வை வளமாக்க கூடியவை ஆகும்.அதனால்தான் சான்றோர்கள் “காரணமில்லாமல் காரியமில்லை” என்று சொல்லி வைத்தார்கள்.


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. 

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

பஞ்சகவ்யம்

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. குணமுடையன இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி 
பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி 
பசும்நெய்:மோட்சம் 
கோசலம் :தீட்டு நீக்கம் 
கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும்.கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் காரணமாககருவறைகள் , சிலைகள், இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு. 

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல் 
அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் தன்மை கொண்டவை, என்றென்றும் புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர். பசுவின் பால்,தயிர், நெய். கோமயம், சாணம் னும் இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் எனப்படும் 
இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும். 

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு 
பசுந்தயிர் :2 அளவு 
பசும்நெய் :3 அளவு 
கோசலம் :1 அளவு 
கோமயம் : 1 அளவு 
தர்ப்பை கலந்த நீர் 3 அளவு 

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது .
பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்வு உண்டு.
பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும்
நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,
கருநிறப் பசுவிடமிறந்து நெயும் ,
செந்நிற பசுவிடமிருந்து கோசலமும், 
தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில் "ஆனைந்த "என்பர் . 

பசும் பாலில் சந்திரனும் , 
பசுவின் தயிரில் வாயு பகவானும், 
கோமயத்தில் வருண பகவானும், 
பசும் சாணத்தில் அக்னிதேவனும் , 
நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .


வேளாண்மையில் பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் 
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.
பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.


இந்துக்களின் கடமைகள்:
-------------------------- ---------
இந்துக்களின் தினசரிக் கடமைகள்:

1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.
2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.
4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.
5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.
6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும். 

பொதுவான கடமைகள்;

1. வாரத்துக்கு ஒரு நாளேனும், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
2. தியானம் பழக வேண்டும்.
3. பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.
4. துறவிகள், ஞானிகள், மாடாதிபதிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
5. வீட்டில், நாம சங்கீர்த்தனம், சிறப்பு வழிபாடு போன்றவற்றை, அண்டை அயலார்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்த வேண்டும்.
6. வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.
7. இந்து தர்ம பிரசார இயக்கங்கள் பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிக்கவும்.
8. புராண, இதிஹாஸ, தேவார, திவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.
9. இந்து பண்டிகைகளை, வெறும் விழாக்களாகக் கருதாமல் தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.
10. அருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண் பார்வையற்றோர், செவிகேளாதோர் சேவை இல்லங்களுடன் தொடர்பு கொண்டு, இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
11. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணிவிடை செய்தல் வேண்டும்.
12. வீட்டில், தரக்குறைவான சினிமாப் பாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக் கூடாது. பாலுணர்வு, வன்முறை, பழிக்குப்பழி, பேராசை ஆகிய தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் - புத்தகங்களை வாங்கக் கூடாது.

நன்றி திரு கருணாநிதி அவர்களுக்கு