Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 


சிகப்பு அரிசி (Brown Rice)
-------------------------- ------
உலகின் 60% மக்கள் அன்றா டம் உண்பது (நம்மையும் சேர்த்துதான்) வெள்ளை அரிசியே! வெள்ளை அரிசியும் நல்ல அரிசிதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான். முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந் தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று, உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசி யத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். இன்றைய தலை முறை இளம் பெண்களில் பலரும் உரல், உலக்கையை பார்த்திருக்கக்கூட மாட் டார்கள்.

அரிசியில் நான்கு பகுதிகள் உண்டு. வெளிப்பகுதியான உமியை நீக்கிவிடுகிறோம். அடுத்த பகுதியான தவிடுதான் முக்கியமான பகுதி. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தவிடு நீக்காத அரிசி, பழுப்பு அரிசி (Brown rice)என்றும், தவிடு நீக்கிய அரிசி வெள்ளை அரிசி (White rice) என்றும் அழைக்கப்படுகின்றன. கைக்குத்தல் அரிசி முதல் வகையைச் சார்ந்தது. இந்த இரண்டு அரிசிக்கும் உள்ள ஊட்டச்சத்து வித்தியாசங்களைப் பட்டிய லிட்டால், கைக்குத்தல் அரிசியின் சிறப்பு புரியும்.ஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்...

நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து, வைட்டமின் சத்துக்கள் போன்றவையெல்லாம் அதிகமாகவும், கொழுப்பு போன்றவை குறைவாக வும் இருக்க வேண்டும். அதுதான் உடலுக்கு நல் லது. இங்கே இரண்டு அரிசியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... வெள்ளை அரிசியைவிட, பழுப்பு அரிசி பல மடங்கு உயர்ந்தது என்பது புரியும்!

அரிசியைத் தீட்டும் வழக்கம் ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுப்பு நிற அரிசியை பரிசுத்த வெள்ளை ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் அவர்கள் அதைத் தீட்டினார்கள். முதலில் 2% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள். இப்போது 12% தீட்டப்படுகிறது. விளைவு - இன்றைய அரிசி மல்லிகைப் பூபோல வெண்மையாகக் கிடைக் கிறது. இதன் மற்றொரு விளைவு - ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது.

1963-ல் நம் நாட்டில் வெறும் ஏழு ரப்பர் - ரோலர் அரிசி மில்கள்தான் இருந்தன. இதுவே 1999-ல் 35,088 மில்களாக அதிகரித்தன. தற்போது இன்னும் பெருகி, அரிசியை அரைத்துத் தள்ளு கின்றன. சர்க்கரை நோயின் தாக்கமும் இதே வேகத்தில் அதிகரித்து வருகிறது.

அரிசியின் வெளிப்புறத் தவிடு, மருத்துவ ரீதி யாக எவ்வளவு முக்கியமானது என்பதைக் கண்டு பிடித்த வரலாறு சுவையானது. 1884-ல் கானிரோ என்ற ஜப்பானிய கடற்படை டாக்டர், ஜப்பானில் இருந்து ஹவாய் நோக்கிப் பயணம் செய்தபோது, 9 மாத பயணத்தில் 169 கப்பல் ஊழியர்களில் 76 பேருக்கு 'பெரிபெரி' (Beriberi)என்கிற நோய் தாக்கி, 25 பேர் உயிர் இழந்ததைப் பார்த்தார் ('பெரிபெரி’ நோய் - நரம்பு பாதிப்பால் கை, கால் வலி, அசதி, பசியின்றி உடல் எடை குறைதல், இதய செயல்திறன் பாதிப்பு, மூச்சுத் திணறல், உடல் வீக்கம், மூளை பாதிப்பால் சுயநினைவு இழத்தல் முதலியவை ஏற்பட்டு இறுதியாக மரணம்கூட ஏற்படலாம்).
கப்பல் ஊழியர்களை பாதித்த இந்த நோயை ஆராய்ந்த டாக்டர் கானிரோ, அவர்களுக்கு பட்டை தீட்டிய பச்சரிசி சாதம் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டதை கவனித்தார். உடனே, இன்னொரு கப்பலில் இதே அளவு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, இதே பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். இம்முறை, அரிசி தவிர, பார்லி, காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற உணவும் பரிமாறப்பட்டது. இதில் 14 பேருக்கு மட்டுமே 'பெரிபெரி’ வந்தது. ஆனால், யாரும் இறக்கவில்லை. ஆகவே, உணவுதான் இந்த வியாதிக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனாலும், அடுத்த 13 வருடங்கள் கழித்து, 1897-ல்தான் டாக்டர் கிறிஸ்டியன் ஜெக்மேன் மற்றும் டாக்டர் ஃபெரடரிக் ஹாப்கின்ஸ் ஆகியோர், அரிசியின் தவிடு கொடுத்தால்... இந்நோய் தடுக்கப்படும்/குணமடையும் என்று பரிசோதனைகள் மூலம் நிரூபித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக, 1929-ல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

'பெரிபெரி’யின் தாக்கம் இப்போதும் ஆங் காங்கே உண்டு. ஆனாலும், வைட்டமின் பி1 வேறு உணவுகள் மூலம் கொஞ்சமாவது கிடைத்து விடுவதால், பெரும்பாலானோர் இதிலிருந்து தப்பிவிடுகிறார்கள். மதுவுக்கு பி1 சத்தை அழிக்கும் குணம் உள்ளதால், மதுவுக்கு அடிமையானோர் பலரிடம் இந்த வியாதியை அடிக்கடி பார்க்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்... அரிசியைத் தீட்டுவதற்கு நமக்குக் கற்றுத் தந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் மட்டும் 'பெரிபெரி’, சர்க்கரை நோய் இவற்றில் இருந்து தப்பிவிடுகிறார்கள். அரிசியில் இருந்து பி1 மற்றும் சத்துக்களை நீக்கிய பிறகு, செயற்கையாக அவற்றை மீண்டும் அரிசியில் கலந்து விடுகிறார்கள் - சமையல் உப்பில் அயோடின் கலப்பதைப்போல (உப்பு கதை பற்றி பிறகு விரிவாக பேசுவோம்). மேலும், கோதுமை, நார்ச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்ற வற்றை அவர்கள் வெகுவாக எடுத்துக் கொள் கிறார்கள். நம்மவர்களோ, நோபல் பரிசு பெற்றுத் தந்த தவிட்டை மாடுகளுக்குக் கொடுத்துவிட்டு, தீட்டிய அரிசிச் சோற்றை உண்டு, சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது - பச்சரிசியா... புழுங்கல் அரிசியா என்பது. பச்சரிசி என்பது பட்டைதீட்டப்பட்ட வெள்ளை அரிசி. புழுங்கல் அரிசி என்பது, நெல்லை தண்ணீரில் ஊற வைத்து, அவித்து, அதன்பின் தீட்டுவது. இப்படி அவிக்கும்போது, தவிட்டுப் பகுதியில் உள்ள பல சத்துக்கள் சற்று உருகி, உள்ளே உள்ள மாவுப்பகுதியில் கலந்து விடுகின்றன. ஆகவே, தீட்டப்பட்ட பிறகுகூட, பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியில் நிறைய சத்துக்கள் மிஞ்சியிருக்கின்றன என்பதே உண்மை.

ஊட்டப்பொருட்களையும் இழந்து, நச்சுத் தன்மையை அடைந்துவிட்ட ஆலை அரிசியை நாம் ஏன் உண்ண வேண்டும்? கைக்குத்தல் அரிசிக்கு மாறலாமே? இல்லை, ஆலை அரிசி தான் விதி என்றால்கூட, குறைந்தபட்சம் புழுங்கல் அரிசிக்கு ஏன் மாறக்கூடாது?


வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!

பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள்

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலையின் குணங்கள்.
.............................. .............................. ....................
கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலையில் புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன.
மூக்கடலைக்கு மருத்துவ குணங்கள் பல உண்டு.
மூக்கடலையை சுண்டல் செய்து உண்பதும் மிகச் சிறந்தது.
மூக்கடலை சுண்டல் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும், உடல் உறுதியாகும்.
கடலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் சீதக் கழிச்சல் குணமாகும்.
பச்சைக் கொண்டைக் கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்.சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றிய தகவல் !!!

சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம் சோளத்தை சுட்டு தருவார்கள் தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும் மற்றும் பொழுது போக்கு சார்ந்த இடங்களிலும் சாப்பிட்டு இருப்போம் . நவீன காலத்தில் பெரும்பான்மையான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் சோளம் சில கலவைகளை சேர்த்து விற்பனை செய்கிறார்கள் . சோளத்தில் இவளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது .சோளம் மிகவும் ஒரு சத்தான பொருளாகவே இருக்கிறது 

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம் 

ஆற்றல்-349 கி.கலோரி, புரம்-10.4 கிராம், கொழுப்பூ1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி

உடல் இளைக்க பசும் தேநீர் (கிரீன் டீ)..!

1.கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும்  உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .


கிரீன் டீ-யின் பயன்கள் :

* கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
* சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
* இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
* ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
* எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
* முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
* சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
* குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
* சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
* எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
* சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

இன்று பிளாக் டீ பற்றிய தகவல்.

நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா? தினமும் 4 கப் பிளாக் டீ குடித்தால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஜெர்மனியில் உள்ளது ஹெயின்ரிச் ஹெயின் பல்கலைக்கழகம் மற்றும் லிப்னிஸ் சென்டர் ஃபார் டயாபடிக் ரிசர்ச் நிறுவனம். இரண்டும் இணைந்து க்ரிஸ்டியன் ஹெர்பர் தலைமையில் நீரிழிவு நோய் குறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிவில் தினமும் 4 கப் பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தி உள்ளனர். தினமும் அவர்களுக்கு பிளாக் டீ கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதில் டைப் 2 வகை நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

டீ குடிக்காத மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்களுக்கு 20 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ மட்டுமே அருந்த வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டைப் 2 நீரிழிவு நோய்க்கு நார்ச் சத்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் இணைந்தே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். இவற்றுடன் தினசரி 4 கப் டீ, டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உறுதியாகி உள்ளது. இதனால் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளன


மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சிறந்த உணவுகள்!!!

சிலரது மனநிலை மிகவும் மந்தமாக, புத்துணர்ச்சியின்றி இருக்கும். இவற்றிற்கு காரணம் அதிகப்படியான வேலைப்பளுவும், அதிக கோபமும் தான் காரணம். மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹார்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே ஆகும். இவ்வாறு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்து விடலாம். 

இத்தகைய ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொட்டாசியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்காக கஷ்டப்பட வேண்டாம். அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு, மனநிலையை சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள். 

ஸ்ட்ராபெர்ரி 

ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், இதனை சாப்பிடும் போது, மனமானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாழைப்பழம் 

ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே, வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள இயற்கை இனிப்பானது, இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, உடலில் இரத்தத்தை சீராக பாய வைக்கும். அதிலும் இதில் உள்ள மாச்சத்துள்ள கார்போஹைட்ரேட், மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது. 

சூரியகாந்தி விதை 

சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. உண்மையில், இந்த பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடனே மனதிற்கு ஒருவித அமைதி கிடைத்து, மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். மேலும் இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். தக்காளி தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற உணவுப் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இவற்றில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது மூளைக்கு ஏற்படும் பிரச்சனையை தடுக்கும். 

கற்பூரவள்ளி 

கற்பூரவள்ளியில் காஃபியிக் ஆசிட், குவர்சிடின் மற்றும் ரோஸ்மாரினிக் ஆசிட் போன்றவை உள்ளது. இவை மனஇறுக்கத்தை குறைக்கும் பொருட்கள், எனவே கற்பூரவள்ளியை உணவில் சேர்த்து வந்தால், மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். டார்க் சாக்லெட் அனைவருக்குமே டார்க் சாக்லெட்டை நன்கு தெரியும். இதில் உள்ள அனடாமைன், மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கவனத்தை அதிகரித்து, மூளையின் சக்தியையும், சரியான மனநிலையையும் வைக்கும். மேலும் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இதனை அளவாக சாப்பிடுவது நல்லது. 

முட்டை 

முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது. இந்த பொருட்கள் அனைத்துமே மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் இவை புத்துணர்வான மனநிலையையும் வைக்க உதவும். அஸ்பாரகஸ் அஸ்பாரகஸில் ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோபேன் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் ஃபோலேட் அளவானது குறைவாக இருந்தால் தான், மந்தமான நிலை ஏற்படும். மேலும் ட்ரிப்டோபேன் என்னும் பொருளானது, செரோடோனின் அளவை அதிகரித்து, மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும். 

பால் பொருட்கள் 

பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. பொதுவாக புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் ஆனது. அநத் அமினோ ஆசிட்டுகள், உடலில் உள்ள சக்தியை அதிகரிப்பதோடு, மனநிலையையும் அமைதியாக வைக்கும். எனவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டும். 

தேன் 

இயற்கை இனிப்புகளுள் ஒன்றான தேன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தேனில் உள்ள குவெர்செடின், மூளையில் உள்ள காயங்களை குணப்படுத்த வல்லது. மேலும் தேனை விரும்பி சாப்பிட்டால், மன அழுத்தம் குறைவதோடு, மூளையும் ஆரோக்கியத்துடன் இயங்கும். குறிப்பாக தேன், உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். 

தேங்காய் 

தேங்காயில் நடுத்தர சங்கிலியான ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை ஒரு ஸ்பெஷலான கொழுப்புக்கள் என்பதால், அவை மனநிலை நன்கு வைப்பதோடு, உடல் முழுவதற்கும் மிகவும் சிறந்தது. 

மீன் 

மீனிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே மன அழுத்தத்தைப் போக்குவதற்கு, மீனை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. 

கார்போஹைட்ரேட்டுகள் 

கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டாலும், செரோடோனின் என்னும் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியானது அதிகரிக்கும். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான தானியங்களால் ஆன பிரட், ரொட்டி, பரோட்டா போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். 

காப்ஃபைன் 

அதிக டென்சனுடன் இருக்கும் போது, காப்ஃபைன் உள்ள காபி அல்லது டீ குடித்தால், நிச்சயம் டென்சன் நீங்கி, மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்தால், பின் அது கேடு விளைவிக்கும். 

இறைச்சி 

இறைச்சியிலும் போதுமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சசியுடனும் வைத்துக் கொள்ள முடியும். 

இனிப்புகள் 

பொதுவாக வாய்க்கு சுவையாக இருக்கும் இனிப்பு பொருட்களை சாப்பிட்டால், அது எண்டோர்பின் உற்பத்தியை அதிகரித்து, மனதை மகிழ்ச்சியோடு வைக்கும். எனவே எந்த ஒரு இனிப்பு உணவுப் பொருளையும் அளவாக சாப்பிட்டு, நன்மையை பெறுவது நல்லது. 
ஆரஞ்சு ஜூஸ் 

ஃபோலிக் ஆசிட் குறைபாடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த குறைபாடு, செரோடோனின் அளவை குறைத்து, மனதை ஒருவித அழுத்தத்தில் உள்ளாக்கும். எனவே மந்தமான மனநிலை இருக்கும் போது, ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கலாம்.

நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்:-

தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. 

உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!!!


பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.


வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.


வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.


லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.


காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.


பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.


பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், 


நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..?!

சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.

1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா?

2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா?

3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா?

4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா?

5.மேற்கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதுநல்லதா?

6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத்தான் அருந்த வேண்டுமா?

பதில்:

எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும்.

ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.

ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.

அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும்.

இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும்.

சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.

நீங்கள் இன்னும் சரியாக உங்களுக்குத் தேவையான நீரின் அளவைக் கணித்துக் கொள்ள விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள கணிப்பானில் உங்கள் தரவுகளைக் கொடுப்பதன் மூலம் கணித்துக் கொள்ள முடியும்.

உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம்.
அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ.

அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை)

ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.
இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம்.

மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.

வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரிழப்பு அதிகரிப்பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம். நீரிழிவைத் தடுக்கலாம்.


சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.

தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்..

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு..

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்..

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்..

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்..

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்..

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு..

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்..

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

காய்ச்சல்
சாதாரண ஜூரத்திற்கு..

இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.

காய்ச்சல் குணமாக..

சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

காய்ச்சல்..

காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

குளிர்காய்ச்சல்..

நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.

எந்த விதமான காய்ச்சலும் குணமாக..

வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.

குறிப்பு : குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்.

நன்றி திரு கருணாநிதி அவர்களுக்கு